புலிகளைப் பற்றி விமர்சனமும்…..! சுய விமர்சனமும்…..!!

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு புலிகள் தமது தவறுகளை தமது ஸ்தாபன முடிவாக எடுத்து மேற்கொண்டனர் ஏனையவர்கள் நடைமுறைத்தவறுகளை செய்தனர். அதாவது புலிகளின் தவறு கொள்கை ரீதியான தவறு ஏனையவர்கள் கொள்கை ரீதியாக இத் தவறுகளை செய்யவில்லை. இவற்றில் கூட ஒரு தவறை மற்றொரு தவறால் சரிசெய்யும் அளவு கோல் என்ற பார்வையே தவறானது. ஆனாலும் அளவுகளிலும் தமிழீழவிடுதலைப் புலிகளின் தவறுகள் மிக அதிகமானது. இதில் முக்கியமானது தமது மக்களின் விடுதலைக்காக போராடுவதற்குரிய ஜனநாயக உரிமையை மறுத்து அவ் அமைப்புக்களை தடைசெய்தல் என்பதை ஆரம்பித்து சகோதரப்படுகொலையை ஸ்தான ரீதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் தவறு என்பதை இதுவரை ஐயரில் இருந்து ஆரம்பித்து தமிழ் கவி வரை யாரும் பொதுவெளியில் கூறவில்லை.. உணரவில்லை…. வருந்தவில்லை. ரெலோ மீதான தாக்குதலே விடுதலைப் போராட்டததை படுகுடியிற்குள் தள்ளிய ஆரம்ப புள்ளியாக அமைந்தது என்பதை நாம் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.

தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் மக்களுக்கே உண்டு மாறாக ஒரு ‘விடுதலை’ அமைப்பு தானே இதனை ஏகபோகமாக எடுத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு. பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் தாம் செய்த நடைமுறைத்தவறுகளுக்காக பொது வெளியில் பல காலங்களிலும் பல தரப்பிலும் தலமை உட்பட தோழர்களாக ஏன் இன்றும் இன்னமும் கருத்தரங்குகள் பொது கூட்டங்களில் இதற்கான வருத்தங்கள் சுய விமர்சனங்கள் மன்னிப்புகள் என்பனவற்றை செய்தே வருகின்றனர் வேண்டியளவு செய்து விட்டனர் எனலாம் இவர்களின் வெளியீடு கூட்டங்களில் இதனை நிறையவே காணலாம் (இதனை எத்தனை பேர் வாசித்தனர் கேட்டனர் என்பது அவரவர் பிரச்சனை) அதாவது அமைப்பு ரீதியாக முழுமையாக இதனை செய்து முடித்திருக்கும் அமைப்பு அவ் அமைப்பாகும்.

யாரும் இது வரை தமது தவறுகளுக்கான சுய விமர்சனங்களை செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவில் கூறுவது என்பது தவறு. கட்டுரையில் ஓரிடத்தில் சிலர் செய்ததாக கூறியும் இன்னொரு இடத்தில் யாரும் செய்யவில்லை என்றும் முரண்பாடாக கூறியதை நான் எழுத்து ஓட்டத்தில் ஏற்பட்ட தவறாக உணர்கின்றேன். போராடுவதற்குரிய ஜனநாயகத்தை மறுத்தது. மாற்றுக் கருத்துகளுக்கான இடைவெளியை மறுத்து அவர்களை கொலை செய்தது. பன்முகப்படுதப்பட்ட தலமையை மறுத்து ஏகபோகமாக செயற்பட்டது.

ஆரம்பத்தில் 1986 களில் நிலவிய ஜக்கிய முன்னணியின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஏகோபித்த முடிவு என்ற வீற்ரோ அதிகாரத்தை பாவித்து ஐக்கிய முன்ணியை உடைத்தது இதில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சகோதரப்படுகொலையே ஈற்றில் தனித்து நின்று எதிரியினால் அழிந்து போனதற்கு காரணமாக அமைந்தது என்பதை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது சுய மீள்பார்வை மூலம் உணரப்பட வேண்டும். மாற்று இனங்கள் மீதான வன்மம் எமக்கான நட்புசக்திகளை அரிதாக்கி பகைவர்களை உள்ளும் வெளியேயும் எற்படுத்தி சர்வ தேசத்தில் தனிமைப்பட்டுப் போன நிலமை இறுதிக்காலத்தில் ஒருவர் கூட ஆகாய மார்க்கமாகவேனும் (அது நோர்வேயாக இருந்தாலும்) காப்பாற்றப்பட முடியாமல் தலமைகள் கூட மடிந்து போன நிலமைக்கு இட்டுச் சென்றது.
இவர்கள் (புலிகள்) நம்பகத்தன்மையற்றவர்கள் என்று (ஆரம்பத்தில் கம்பளம் விரித்தவர்கள் கூட) நம்பும் அளவிற்கு புலிகளின் வரலாற்றில் நடைபெற்ற பல நிகழ்வுகள் காரணமாக அமைந்தன. விருந்திற்கு அழைத்துவிட்டு நஞ்சும் வைப்பார்கள்… பேசிக் கொண்டு இருக்கும் போதும் சுட ஆரம்பிப்பார்கள்… போர் நிறுத்தத்தை ஒரு நடுநிலையாளரின் உதவியுடன் ஆரம்பித்து இடை நடுவில்லை இதற்கு பாதகமாக செயற்படுவர்… இப்படி பல அடுக்கலாம் இவற்றை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக 1990 களின் பின்பு சர்வதேச சமூகத்தின் தார்மீக ஆதரவை எமது போராட்டம் பெறுவதை தவறிவிட்டது. மாறாக விழும் மரணங்களின் எண்ணிக்கை மூலம் வென்று விடலாம் அது காற்று புக முடியாத இடத்தில் புகுந்து கூட என்று அதீதமாக இராணுவாதத்தை நம்பி அழிந்து போனதுவே எமது மக்களுக்கான விடுதலைப் போராட்டம். வருந்துகின்றேன்….. இந்நிலமைகளுக்கு இவற்றை நாம் மீள் பார்வைக்கு உள்ளாக்க வேண்டும்.

இன்றும் இன்னமும் வன்முறையற்றை ஆரோக்கிய விவாதம் கலந்துரையாடலுக்கும் தயாரில்லா நிலமையே தொடருகின்றது பல இடங்களில் புலிகளின் உறுப்பினர்கள் கருத்தரங்குகள் புத்தக வெளியீடுகளை வன்முறை மூலம் குழப்பும் வெருட்டி நிறுத்தும் நிகழ்வுகள் தொடரவே செய்கின்றன.

(இக்கட்டுரை கீழ் இருக்கும் முகநூல் பதிவு ஒன்றிற்காக எழுதப்பட்டது)

Thamil Mathy

எம்மை போஸ்மோட்டம் செய்யமுன் முதலில்
உங்கள் கடந்தகாலங்களை தோண்டி போஸ்மோட்டம் செய்யுங்கள்

ரெலோ தோழர்களுக்கும் மற்றும் ஏனைய இயக்த்தோழர்களுக்கும் வணக்கம்,

கடந்தகால தமிழர் ஆயுதப்போராட்ட வரலாறு சம்மந்தமாகவும் அதன் ஆரம்பம் பின்னர் எழுச்சி அதன்பின் முரன்பாடுகள் அதனூடான சகோதர ஆயுதமோதல்கள் பின்னர் தமிழர்களுக்கு ஏகோபித்த தலைமையேற்று 2009, May 19 முள்ளிவாய்க்கால் வரையும் விடுதலைப்புலிகளின் வீரம்செறிந்த போராட்டம் அந்த போராட்டத்தில் நடந்த சாதக பாதக விடயங்கள் தந்திரோபாயத் தவறுகள் என்பனவை பற்றிய நீதியானதும்
நேர்மையானதுமான ஆய்வுகளும் சுயவிமர்சனங்களும் நிச்சயம் தேவைதாயானதுதான் அது வரவேற்கப்படவேண்டியதுதான்,அதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை

இந்த ஆய்வுகளும்,விமர்சனங்களும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும்,எமது சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துதாக இருக்கவேண்டும் தவர விமரசனம் ஆய்வு என்ற பெயரில் கொச்சைப்படுத்தலையும் உண்மைகளை மறைத்து பொய்மைகளையும் திரிபுபடுத்தல்களையும் திட்டமிட்டு செய்தல் ஆய்வுகளுமில்லை சுயவிமர்சனமுமில்லை
அதன் பெயர் கொச்சைப்படுத்ல் எமது கடந்தகால வரலாற்றை அடுத்த சந்ததிக்கு பொய்மைகளுடன் விட்டுச்செல்லும் வரலாற்று தவறை நீங்கள் செய்கிறீர்கள்,

சுயவிமர்சனம் என்பது ஒரு தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ தம்மை தாமே ஆய்வு செய்யும் விடயம் அதாவது தமது கடந்தகால சரி தவறுகளை தாமே தமக்குள்
பேசுபொருளாக்கி அவைகளை ஆய்வுக்குட்படுத்தி கடந்தகாலத்தில் தாம் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விடாமல் இருப்பதற்காக செய்யப்படும் ஆய்வே சுயவிமர்சனமாகும் ஆனால் தற்போது ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளிகள் எனச்சொல்லப்படுபவர்கள் சயவிமர்சனம் என்ற பெயரில் செய்யும் ஆய்வானது உன்மையில் சுயவிமர்சனமில்லை மாறாக அவர்கள் செய்வது தமது கடந்தகால மாபெரும் தவறுகளையும் கழிசறைத்தனங்களையும் மறைத்து தம்மை எந்தவொரு மாபெரும் தவறுகளின் துவக்கப்புள்ளிக்கும் வித்திட்டவர்கள் எனும் பெரும் வரலாற்றுப்பழியை மறைத்து தனியே விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மட்டும் கடந்தாகல சகல விடயங்களுக்கும் குற்றவாளியாக காட்டுவதற்கு எடுக்கும் பெரும் முயற்சியாகும் இந்த வகையான உள்நோக்கம்கொண்ட செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் காரணம்
நீங்கள் செய்யும் கடந்தகாலத்தைப்பற்றிய உண்மைக்குப் புறம்பான திரிபுபடுத்தல்களும் கொச்சைப்படுத்தல்களும் எமது தமிழ் சமூகத்தை தற்போதைய நிலையிலிருந்து மேலும் பிளவடையச்செய்யும் மேன்மேலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஏனெனில் உங்கள் ஆய்வுகளில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன பொய்மைகள் விதைக்கப்படுகின்றன,

மற்றும் சுயவிமர்சனம் எனும் கருப்பொருளின்
உள்ளார்ந்த அர்த்தத்தையே மாற்றி நீங்கள் உங்களது கடந்தகாலத்தை விமர்சனம் செய்யாது இன்னுமொரு இயக்கத்தை குறைகூறவதிலும் குற்றம் கண்டுபிடிப்பதிலும்
அதனோடு சேர்த்து உங்களை தூய்மையானவர்களாக காட்டுவதிலுமே குறியாக
இருக்கிறீர்கள் இது எந்தவகையில் சுயவிமர்சனமாகும்?

எனவே விடுதலைப்புலிகளாகிய நாம் எம்மை
அவ்வப்போது சுயவிமர்சனம் செய்துகொண்டுதானிருக்கிறோம் உதாரணம் அரசியல் பிரிவு போராளியான தமிழினி எழுதிய ஒரு கூர்வாழின் நிழலில் குணா கவியழகனின் விடமேறிய கனவு நஞ்சுண்ட காடு போன்றன மற்றும் சமூகவலைத்தளங்களினூடாக நாமும் அவ்வப்போது எமது கடந்தகால தந்திரோபாய தவறுகள் போராட்ட உள்ளகத்தவறுகள் என்பனபற்றி காத்திரமானதும் நியாயமானதுமான சுயவிம்சனங்களை நேர்மையாகவும் நீதியாகவும் உள்ளத்தூய்மையுடனும் மக்கள் முன்வைக்கிறோம் எமது தவறுகளை நாம் சுயவிமர்சனம் செய்யும் அளவுக்கு உங்களது கடந்தகால தவறுகளை நீங்கள் சுயவிமர்சனம் செய்யும் உள்ளத்துணிவு உங்களிடமிருக்கிறதா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனச்சாட்சியை கேட்கவேண்டும்,

அத்தோடு மாற்று இயக்கப்போராளிகளாகிய நீங்கள் உங்கள் கடந்தகாலங்களையும் உங்களது போராட்டப்பாதையில் நீங்களும் உங்கள் தலைமையும் விட்ட தவறுகள் சரிகள் என்பனபற்றி எப்போதாவது யாராவது கடந்தகாலங்களில் ஆவணவடிவில் சுயவிமர்சனம் செய்திருக்கிறீரகளா?(புளட்டிலிருந்து பிரிந்து வந்து தீப்பொறியாக இயங்கிய கேசவன் ஜான் மாஸ்ட்டர் ஆகியோரின் புதியதோர் உலகம் தவிர்ந்த வேறு யாராவது)

எனவே முதிலில் நீங்கள் உங்களையும் உங்களது கடந்தகாலத்தையும் போஸ்மோட்டம் செய்யுங்கள் உங்களது கடந்தகாலத்தை தோண்டி எடுங்கள் அங்கு பல அசிங்கமான
உண்மைகள் உயிர்ப்புடன் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உண்மைகளை தைரியமும் உள்ளத்தூய்மையும் இருந்தால் தமிழ் மக்கள் முன் வையுங்கள் பார்க்கலாம் உங்களால் அதைச்செய்ய முடியாதபோது விடுதலைப்புலிகளாகி எம்மை நீங்கள் போஸ்மோட்டம் செய்யும் எந்தவொரு தார்மீக உரிமையும் உங்களுக்கு கிடையாது,

ஆகவே எமது மாற்று இயக்கத்தோழர்களான ரெலோ,ஈபிஆர்எல்எப்,பிளட் ஆகிய தோழரகளே நீங்கள் விடுதலைப்புலிகளாகிய எம்மை போஸ்மோட்டம் செய்யமுன் முதலில்
உங்கள் கடந்தகாலங்களை தோணடி போஸ்மோட்டம் செய்யுங்கள் அதன்பிறகு இந்த போராட்டத்தை ஏகபிரதிநிதித்தும் செய்து வழிநடத்தியவர்கள் என்றவகையில்
எம்மை நீங்கள் போஸ்மோட்டம் செய்யலாம்,
அதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால்
உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டுமே தவிர கொச்சைப்படுத்தலாக இருக்ககூடாது,

யாழ் மாநகர சபை குப்பைகள்

ஒவ்வொரு பிரதேச சபைக்கும் நகர சபைக்கும் மாநகர சபைக்குமான கடமை என்பது அந்தந்த சபைகளுக்குரிய அதிகாரத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்வது என்பதே. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தமிழர்களே. உள்ளூர் யுத்தம் என்பது உயிர் உடமைகளை வரையறை இன்றி காவு கொண்டு ஒரு அழிவில் இருந்து மீண்டு ஒன்பது ஆண்டுகள் எமது சமூகத்தின் கடமைகளை செய்கின்ற சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தியை மேற்கொள்ளுகின்ற நிர்வாகமும் நிதியும் எமது கையில் வந்த பின்னரும் இன்னும் சுற்றுச்சூழல் மாசடைவதை பார்த்தும் பாராமல் குப்பைகூளங்கள் சபைகளினால் குறிப்பாக யாழ் மாநகர சபையினால் அகற்றப்படாமல் இருப்பது என்பது தமிழ் நிர்வாகத்தின் கையாலாகா தனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

(“யாழ் மாநகர சபை குப்பைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று திருப்பம்: பிரதமரானார் மஹதீர் மொஹமட்

மலேசியப் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட், தெரிவாகியுள்ளார். 222 உறுப்பினர்களைக் கொண்ட, மலேசிய நாடாளுமன்றத்தின் ஆட்சியை தீர்மானிப்பதற்காகவும், பிரதமரைத் தெரிவு செய்வதற்காகவும் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 113 ஆசனங்களைக் கைப்பற்றிய மஹதீர் மொஹமட் தலைமையிலான பகடான் ஹரபான் (நம்பிக்கைக்கான முன்னணி) கட்சி ஆட்சியை தனதாக்கியுள்ளது. மலேசிய பிரதமராக தெரிவாகியுள்ள 92 வயதான மஹதீர் மொஹமட், உலகின், மக்களால் தெரிவான மிக வயதான தலைவராக கருதப்படுகின்றார்.

(“வரலாற்று திருப்பம்: பிரதமரானார் மஹதீர் மொஹமட்” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?: வெற்றியை தீர்மானிக்கும் 3 காரணிகள்

(இரா.வினோத்)

‘கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?’ – என்பதை இந்தியாவே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துக்கட்ட போராட்டத்தையும் அரங்கேற்றி, அங்கு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக, மஜக மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றன.

(“கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?: வெற்றியை தீர்மானிக்கும் 3 காரணிகள்” தொடர்ந்து வாசிக்க…)

“நரேந்திரமோடியின் இந்த நான்காண்டு ஆட்சியில்  15 – 24 வயதுடைய 72 லட்சம் இளைஞர்கள்  வேலை இழப்பு”

– டாக்டர் மன்மோகன் சிங்.

பிரச்சாரத்திற்காக எதையும் பேசும்
இழிவான மனிதரல்ல மன்மோகன் என்பதை
நினைவிற்கொண்டு மேலும் வாசியுங்கள்.

“காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில்
விவசாய விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்ட
குறைந்தபட்ச ஆதரவு விலை 193 சதம்.

பா.ஜ.க ஆட்சியில் அது வெறும்
36 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும்
மோடி ஆட்சியில்
விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி
21% குறைந்துள்ளது;
இறக்குமதியோ 60% ஆக அதிகரித்துள்ளது.

2022 இல் விவசாயிகளின் வருவாய்
இரட்டிப்பாகும் என மோடி சொல்லியுள்ளது
சாத்தியமே இல்லை”

எனவும் மன்மோகன் கூறியுள்ளார்.

(அ.மார்க்ஸ்)

‘‘என் தாய் இத்தாலிகாரர்தான்; ஆனால்…’’ – ராகுல் காந்தி உருக்கம்

என்னுடைய தாய் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்தான், ஆனால், சிறந்த இந்தியராகவே வாழ்ந்து, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

(“‘‘என் தாய் இத்தாலிகாரர்தான்; ஆனால்…’’ – ராகுல் காந்தி உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்

மத்திய அரசுக்கும் ‘நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில்’ (என்எஸ்சிஎன்-ஐஎம்) அமைப்புக்கும் இடையில் 2015 ஆகஸ்ட் 3-ல் கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பக்கம் பக்கமாக பலரால் விமர்சனங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த ஒப்பந்தம் நாகா மக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அதேசமயம், பக்கத்தில் உள்ள அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. அதில் நியாயமும் உண்டு. ஏராளமான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து, அதன் பிறகு மாநிலங்களின் எல்லைகளும் பரப்பளவும் தீர்மானிக்கப்பட்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் மாறுதல் என்றால் சற்றே பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமுண்டு. எல்லைகள் மாறும் என்பது மட்டும்தான் பிரச்சினையா, வேறு உண்டா என்றும் பார்க்க வேண்டும்.

(“நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்)

ஒக்டைன் 92 – 137 ரூபா

ஒக்டைன் 95 – 148 ரூபா

ஒட்டோ டீசல் – 109 ரூபா

சுப்பர் டீசல் – 119 ரூபா

மண்ணெண்ணெய் – 101 ரூபா

சமுர்த்தி பயனாளிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய்யை பழைய விலையான 44 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காலம் கடந்த ஞானம்

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்!

லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம். – த சோதிலிங்கம்

(“காலம் கடந்த ஞானம்” தொடர்ந்து வாசிக்க…)