இயலாத தாய்
சுட்டு வைத்த பணியாரம்
சிறுபிள்ளை பிராயத்தில்
கடை முழுதும் சென்று விற்றீர்…
விற்று வீடுவந்து
கல்வி தாகத்தால்
பள்ளிக்கும் ஓடுவீர்..
Month: June 2018
திரைப்பட மேதை லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களை நினைவுகூரல்
திரைப்பட மேதை லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்
(Lester James Peries)
அவர்களை நினைவுகூரல்
இலங்கையின் உலகப் புகழ் வாய்ந்த திரைப்பட இயக்குநரும், கதாசிரியரும், தயாரிப்பாளருமான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் தமது 99ஆவது வயதில் 2018 ஏப்ரல் 29, 2018இல் காலமானதை நினைவுகூருமுகமாகவும், அஞ்சலி செலுத்துமுகமாகவும், அன்னார் இயக்கிய திரைப்படம் திரையிடலும், கலந்துரையாடலும்
காலம்: 2018 யூன் 11 திங்கட்கிழமை மாலை 6.30 முதல் 9.30 வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் கூட்ட அறை இல.1 (கனடா) (Scarborough Civic Centre, 150 Borough Drive, On, M1P 4N7)
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயற்பாட்டுக்கான அமையம்(Centre for Creative Thoughts and Action)
E-Mail : creathoughts1@gmail.com
அதிகாரத் தரப்புகளைத் திருப்தி செய்தே….ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தல்
நடந்து முடிந்திருக்கும் ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தலில் 2 தமிழர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பது எந்த விதத்திலும் கொண்டாட்டத்திற்குரியது அன்று. நல்லதோர் உதாரணமாக விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளிற்கும் கரும்புலிகள் தினத்திற்கும் பதிந்திருந்த முகநூல் குறிப்புகளை அவர் நீக்கி, தனது நிலைப்பாடு இப்போது அப்படி அல்ல என்று ட்வீற்றர் தளத்தில் குறிப்பிட்டிருந்ததை அவரது ஆதரவாளர்கள் கூட அவர் கட்சியின் அழுத்தத்தாலேதான் அப்படிச் செய்திருந்தார் என்றும் அதனையும் மீறி அவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதற்காக அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்திருந்தார்கள்.
(“அதிகாரத் தரப்புகளைத் திருப்தி செய்தே….ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)
சிரியாவின் தற்போது நடைபெறும் முஸ்லிம் இனகுழு தீவிரவாதம் போல வேறு மதத்தில் உண்டா..
வைணவர்களும் சைவர்களும் 8~10 நூற்றாண்டில் சிரியா முஸ்லிம் மதக்குழு போல மோதி கொண்டதாக நயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு சொல்கிறது .. சிரியாவை விட மோசமாக எழாம் நூற்றாண்டில் மதுரை வட்டத்திலே சுமார் 8000 ஜைன் மதத்தினரை சிவனை கும்பிடும் சைவ மதத்தினர் கொடுரமாக கழுவேற்றி கொன்று உள்ளனர்.
சி.ஐ.ஏ: சித்திரவதையின் உலகமயமாக்கல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அனைத்தும் உலகமயமாகியுள்ள சூழலில், சித்திரவதை விலக்கல்ல. சித்திரவதை பல வகைகளில் நடக்கின்றன. ‘உண்மையை அறியும் வழி’ என்ற போர்வை, சித்திரவதைகளைக் கண்மூடித்தனமான அனுமதிக்கிறது. ‘பயங்கரவாதி’ என்ற சித்திரிப்பு மட்டுமே, ஒருவர் சித்திரவதைக்குள்ளாகப் போதிய காரணியாகிறது. பொதுப்புத்தி மனநிலை, அதை விமர்சனமின்றி ஏற்கிறது. தம்மை நாகரிக ஜனநாயக சமூகங்கள் என்போர், சித்திரவதையை அனுமதிக்கிறார்கள். சித்திரவதை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. நாம், மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூகமா என்ற கேள்வியை, நாமெல்லோரும் கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும்.
”முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பி வந்தார்கள்.ஆனால் இவர்கள் திருந்தி வரவில்லை”
துணுக்காயில் வசிக்கும் இடதுசாரி சிந்தனை செயற்பாடு உள்ள ஓய்வுபெற்ற. அரச உத்தியோகத்தர் ஒருவர் எனக்கு கூறிய வசனம் தான் அது. அது உண்மையிலும் உண்மை. சமூக வலைத்தளங்கள் கழுவோ கழுவென்று கழுவி ஊத்துகின்ற படத்தைக் கண்டவுடன் எனக்கு அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது.
ஒன்றாறியோ மாகாண சபை தேர்தல் 2018
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்
பிரதமர் மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் செய்வேன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வேன்
என்று கூறினார். ஆனால், 15 மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கு
மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடி தள்ளுபடி செய்து இருக்கிறார்.
தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா Swiss இல் Zürich என்னும் நகரத்தில் 03.06.2018 அன்று மாலை நடைபெற்றது.
கடந்த முறைக் காயத்துக்குப் பழிதீர்க்குமா பிரேஸில்?
(Shanmugan Murugavel)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், கடந்த உலகக் கிண்ணம் நடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த உலகக் கிண்ணம் வரையான நான்கு ஆண்டுகளில் நாட்களை எண்ணிக் காத்திருந்த அணி பிரேஸிலாகத்தான் இருக்க முடியும்.
(“கடந்த முறைக் காயத்துக்குப் பழிதீர்க்குமா பிரேஸில்?” தொடர்ந்து வாசிக்க…)