(திரு சிவா ஈஸ்வரமூர்த்தியினால் எழுதப்பட்டு பதிவிடப்படும் தொடரின் ஆரம்ப அத்தியாயங்கள் சில விடுபட்ட நிலையில் அவற்றை வெளியிடுகின்றேன் – ஆர்)
2009 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதிக்கு பின்னர் நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முதன்மையான இருந்த காரணம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1986 இலிருந்து 30 வருடங்களாக நான் எனது தாயக மண்ணில் முழுமையாக சுதந்திரமாக வாழ்வதற்கும், சுற்றிப்பார்ப்பதற்கும், வாய்ப்புக்கள் எற்படவில்லை. யுத்தத்தின் முடிவு நான் புலம் பெயர்ந்ததற்கான காரணத்தை இல்லாமல் செய்திருந்தாலும் வாழ்வில் ஏற்பட்ட புதிய உறவுகள் உடனடி மீள் குடியேற்றத்திற்கு வாய்ப்புக்களை எற்படுத்தவில்லை. ஆனாலும் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிந்த உடன் நான் பிறந்த மண்ணுக்கு முழுமையாக திரும்பி விடுவது என்பது என் சிந்னையில் முடிவாக எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் 30 வருட காலச் சுழற்சியில் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் இதனை ஒட்டிய கடமைகளும், பொறுப்புக்களும் எல்லாவற்றையும் உடனடியாக பொத்தென்று போட்டுவிட்டுச் செல்ல முடியாமல் தடை போட்டுக் கொண்டே வந்தன.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………(அறிமுகம்…).” தொடர்ந்து வாசிக்க…)