ஈழத்திற்காக போராடிய அனைத்து போராட்ட இயக்கங்களையும் ஒன்றினயுமாறு அறைகூவல்

வவுனியா கனகராயன் குளத்தில் ஈழவர் புரசிகர விடுதலை முன்னனியின்(ஈரோஸ்) வித்தாகி போன போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த 22.07.2018 மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது இவ் அஞ்சலி நிகழ்வை ஈரோஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் துஷ்யந்தன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் நிக்ழ்வின் ஆரம்பமாக ஈகை சுடரினை ஈரோஸ் அமைப்பின் வித்தாகி போன மூத்த போராளி ஒருவரின் தாயார் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்தும் மறைந்த போராளிகளின் திருவுருவ படங்களுக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

(“ஈழத்திற்காக போராடிய அனைத்து போராட்ட இயக்கங்களையும் ஒன்றினயுமாறு அறைகூவல்” தொடர்ந்து வாசிக்க…)

சேகுவேராவின் இலங்கை வருகை

1959 ஜனவரி 1 கியூபப் புரட்சியின் பின்னர் புரட்சி நாயகர்களின் ஒருவரான சேகுவேரா கியூபாவின் தேசிய வங்கியின் தலைவராகவும் தொழிற்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய கியூபாவுடன் சர்வதேச நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் முகமாக ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூபாவின் சர்வதேச பிரதிநிதியாகவும் சேகுவேராவே நியமிக்கப்பட்டு இருந்தார்.

(“சேகுவேராவின் இலங்கை வருகை” தொடர்ந்து வாசிக்க…)

ஆடி 1983 இனக்கலவரமும்,தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்,வீழ்சியும்

(அருளம்பலம்.விஜயன்)
இலங்கையின் இனக்கலவரங்களானது இலங்கை சுதந்திரமடைய முன்னரும் ,பின்னரும் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது.உலகத்தையே திரும்பி பார்க்க வைத்ததும்,மிகவும் மோசமாக சிங்கள இனவெறியர்களின் கொடூரங்கள் சிறைக்குள்ளேயும்,வெளியேயும் அரங்கேறிய இனக்கலவரம் என்றால் அது 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தையே சொல்ல முடியும்.
அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இனக்கலவரம் 1915 இல் சிங்கள,முஸ்லீம் மக்களிடையே நடைபெற்றது.

(“ஆடி 1983 இனக்கலவரமும்,தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்,வீழ்சியும்” தொடர்ந்து வாசிக்க…)

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல்; கனேடிய பிரதமர் விசேட அறிக்கை

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் நினைவுக்கூறும் தமிழர்களுடன் தானும் இணைந்துகொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல்; கனேடிய பிரதமர் விசேட அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம்

வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை – இந்திய பிரதானிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)

யாழ்ப்பாணப் பயணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனது குடும்பத்துடன் எமது நட்புக் குடும்பம் ஒன்றின் பிரதான ‘புரோக்கிராமிற்குள்’ இணைக்கப்பட்டதே எனது பயண அனுபவங்கள். எனக்கான தனியான பயண விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடிய வாய்புகள் எனக்கு அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் மற்றயவர்களின் பயணச் செயற்பாட்டிற்குள் என்னை இணைத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றேன். அவற்றை பதிவு செய்ய விளைகின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர்
‘அருண் – செல்லப்பா” தம்பதிகள் தாயகம் திரும்புகின்றனர்.

கர்த்தரும் முருகரும் கைவிட்ட காலமது!
மனிதருள் மாணிக்கம் சிங்களத்தினுள்ளும் உள்ளதென்று நிறுவிய காலமும் அதுவே!

(““என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”” தொடர்ந்து வாசிக்க…)

கோஷ்ஷுடன் 12 சிறுவர்களை மீட்டுச் சாதனை

கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதியன்று, கால்பந்தாட்டப் பயிற்றுனர் ஒருவரும் அவருடன் சென்ற சுமார் பன்னிரண்டு மாணவர்களும், தாய்லாந்தில் இருக்கிற தம் லுங் நாங் என்ற குகைக்குள் சிக்கிக்கொண்டார்கள்.

(“கோஷ்ஷுடன் 12 சிறுவர்களை மீட்டுச் சாதனை” தொடர்ந்து வாசிக்க…)

மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?

(கே. சஞ்சயன்)
“இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். (“மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)

குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது.

(“குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்” தொடர்ந்து வாசிக்க…)