Month: July 2018
எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 1)
(வருடம் ஒன்றிற்கு மேல் எழுத ஆரம்பித்த எனது பயண அனுபவங்கள் பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக தொடர முடியவில்லை… தற்போது அத்தியாயங்கள் பலவற்றை கடந்து இடை அத்தியாயம் ஒன்றில் தொடர்கின்றேன்)
மன்னார், தலைமன்னார் பயணங்கள்…
வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக மன்னார் அல்லது மதவாச்சி செட்டிகுளம் ஊடான பயணம் என்பது வீதிகளின் தரங்களின் அடிப்படையில் எனது பயணம் இரண்டாவது தெரிவாக அமைந்தது. 1980 களின் நடுப்பகுதி வரையிலான எனது கடைசி அனுபங்களே இந்தப் பிரதேசங்கள் பற்றி நேரடி அனுபவங்களாக இருந்தன. வயலும் அதனைச்சார்ந்த தொழில்களும் வற்றாத ஆறும்(மல்வத்து ஓயா) கட்டுரைக் கரைக் குளம் என்று இன்றுவரை வற்றாத இரணைமடுவிற்கு அடுத்து பெரிய குளமும் அமைந்த பிரதேசங்களை ஊடறுத்த பயணமாக அமைந்தது. மகிந்த காலத்து நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை என்பது செட்டிகுளப்பாதையின் தரத்தை மன்னார் வீதியைவிட சிறந்ததாக உணர முடிந்தது. திரும்பி வரும் போது மன்னார் வீதியை பாவித்ததினால் இதனை உணர முடிந்தது. 80 களில் ஓலையிலான வேய்த கடைகளையும் மரக்குற்றிகளினால் ஆனா பிரதான வீதியில் அமைந்த சந்தி தேநீர் கடைகள் இன்று கொங்கிறீர் இனால் ஆன தகரக் கொட்டடைகைகளாக காட்சியளித்தன. ஆனால் மக்களின் வாழ்கைத் தரத்தில் வாழ்கைமுறையில் அதிக மாற்றத்தை யுத்தம் முடிந்து இந்த 8 வருடங்களிலும் காண முடியவில்லை சிறப்பாக குடிசனப் பரம்பல் மிகவும் ஐதாக இருந்தது.செட்டிகுளப்பாதையில் ஒரே புகையிரதத்தை மூன்று வேறுவேறு கடவைகளில் கடந்த அனுபவம் புகையிரத்தின் வேகத்தையும் எமது பயணப்பாதையின் தரத்தையும் அளவீடு செய்வதற்கு ஏதுவாக இருந்தது. பழம் பெரும் கிராமமாக இருந்த செட்டிகுளம் 1970 களில் இருந்த வளர்சிநிலையிலேயே இருக்க காணப்பட்டது. (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)
சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா
(ஜனகன் முத்துக்குமார்)
சீன – ஆபிரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்புச் சபை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பெய்ஜிங்கில் முடிவடைந்திருந்தது. இதில், 50 ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இது ஒரு புறமிருக்க, போர்த்துக்கலின் காச்கீஸ் நகரத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ தலைமையில், போர்த்துக்கேய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசா மற்றும் 20 ஆபிரிக்க அமைச்சர்கள் உட்பட 400க்கும் அதிகமான ஆபிரிக்க, ஐரோப்பியத் தலைவர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபிரிக்க -ஐரோப்பா உச்சிமாநாடு, இதே வாரத்தில் நடந்தேறியிருந்தது.
(“சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா” தொடர்ந்து வாசிக்க…)
’’வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது’’
வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு இன்று (15) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(“’’வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது’’” தொடர்ந்து வாசிக்க…)
புத்தக வெளியீடு
இலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது. இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது.
நானறிந்த அறிவில்…. தமிழ் சினிமாவில்
பட்டுக்கோட்டை மரபு –
கண்ணதாசனின் மரபு –
என்று தனித்துவ நிலைநிறுத்தல்களைத் தாண்டி
வேறு கவிஞர் வரவில்லை….
80கள் வரையில்.
அப்படி வந்து நின்றவர்
வைரமுத்து.
புத்தக வெளியீடும் கலந்துரையாடலும்
கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்
(இனியொரு… )
விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதியெடுக்கும் திறனை மேலும் வளர்த்துக்கொண்டன.
தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பும் அகதிகள்.கப்பல் சேவை எப்போது?
(அருளம்பலம்.விஜயன்)
இலங்கையில் ஏற்பட்ட இனச்சிக்கல்கள் காரணமாக 1983 தொடக்கம் இறுrefugees returnதி யுத்தம் நடைபெற்ற காலகட்டம் வரை இலங்கை தமிழர்கள் பல கட்டங்களாக தமிழகத்துக்கு அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முகாம்களில் இருந்தவர்கள் பல கட்டங்களாக தங்களது சொந்த இடத்துக்கும் சொற்ப அளவில்அவ்வப்போது திரும்பிய வண்ணமும் இருந்தனார். இறுதியாக இந்திய- இலங்கைஒப்பந்தம் ஏற்பட்ட 1987 களில் பெருமெடுப்பில் கப்பலில் தாயகம் திரும்பினர்.
இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!
இது செய்தி என்பதை விட பல பாடங்களை உலகிற்கு கற்பித்த இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு. நம்பிக்கை என்ற அந்த ஒற்றை வார்தையின் பலம் மட்டுமே 10 நாட்கள்…….முதன்முறையாக 4km தொலைவில் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்களை உயிரோடு வைத்திருந்தது.
(“இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!” தொடர்ந்து வாசிக்க…)