வடக்கு, கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Month: July 2018
போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை
போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து
தாய்லாந்தின் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து முழுவதும், நேற்று (11) கொண்டாட்டமான நிலைமையே நிலவியது.
(“சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)
‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’
(இலட்சுமணன்)
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்……. இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
M உம் நான் உம்
(Saakaran)
மனோகரனும் நானும் மூர்த்தியும் நானும்……
2018 ஜுன் 02 மதியம் 12 மணி, இடம் கிளிநொச்சி. மல்லாவி சென்று வருவோம் ஆட்டோவில் என்ற முடிவுடன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளருடன் நான். எம்(ன்) விருப்பப்படி குறிபிட்ட ஆட்டோவை அழைத்துவிட்டு கிளிநொச்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் அலுவலகத்தில் காத்திருப்பு. கிடைத்த இடைவெளியில் அரசியல் பிரமுகருடன் ஒரு சரியான மாற்றுத்தலமையை கட்டியமைக்க வேண்டும் என்பது தற்போதைய அவசியமான தேவையாக உள்ளது என்பது பற்றி கலந்துரையாடல். அவரின் செயற்பாடுகளுக்கு இடையில் எழுத்தாளரால் இவர்தான் கிளிநொச்சி பகுதியில் அடிமட்ட மக்களிடன் செல்வாக்கை பெற்றுவரும் அந்த அரசியல் பிரமுகருக்கு அடுத்த நிலையில் அவருடன் இணைந்து செயற்படுபவர் என்ற அறிமுகம்.
அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?
(அதிரதன்)
பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது.
(“அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?” தொடர்ந்து வாசிக்க…)