சிறப்பு அதிரடிப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளீர்த்து இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இஸ்ரவேல் பாதுகாப்பு முகவரகம் ( Israel security Agency ) இன் சின் பெத் (Shin Beth) பயிற்றுவிப்பாளராக சிறப்பு அதிரடிப்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆயதப் பயிற்சிகளுடன் சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களிடையே எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாக விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற ஆலோசனை மற்றும் திட்டமிடல்களையும் முன்வைத்தார். அவ்வாலோசனைகள் சிறிலங்கா அரசிற்கு தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)” தொடர்ந்து வாசிக்க…)