பிரான்ஸ் நாட்டின் முன்னணி இலக்கியவாதியாகிய விக்டர் ஹியுபோ உலகமே ஏற்கத்தக்க ஒரு உண்மையினை சில வார்த்தைகளால் இவ்வாறு கூறினார். “ஒரு பாடசாலையின் கதவைத் திறப்பவர் சிறைசாலையின் கதவை மூடி விடுகின்றார்” இக்கருத்து எந்தளவு ஆழமான உண்மையாகும் என்பதனை கடந்த பல தசாப்தங்களாக நமது நாட்டிலேயே நம்மால் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. கடந்து சென்ற மூன்று தசாப்தங்கள் முழுவதிலும் அடிக்கடி பாடசாலைகள் மூடுவிழா காணும் அதே நேரத்தில் பல்வேறு வகையான தடுப்பு முகாம்களை பற்றியே எமக்கு அதிகம் கேட்கக் கிடைத்தது. இவற்றுள் சிறைச்சாலைகள், அகதி முகாம்கள், தற்காலிக முகாம்கள், திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகியன நமது நாட்டினதும் உலகத்தினதும் முக்கிய கதைப்பொருளாக அமைந்ததை நாம் கண்டோம். (“27 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் பாடசாலை” தொடர்ந்து வாசிக்க…)
Month: September 2018
தண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு
உலகிலேயே தண்ணீரில்லாத முதல் நகரமாக தென்னாபிரிக்காவின் கேப்டவுண் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கேப் டவுண் கடுமையான வறட்சியில் – நீர்ப்பஞ்சத்தில் – சிக்கித்தவிக்கிறது. இங்கே மூன்று ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில்லை. இதனால் தண்ணீருக்கான கலவரங்கள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. தற்போது தண்ணீரைப் பெறுவதற்காக நீர் விநியோக அட்டை அமூல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு குடும்பத்துக்கு 50 லீற்றர் தண்ணீரே கிடைக்கும். அதற்குள்தான் குளியல், குடிநீர்த்தேவை, சுத்தமாக்கல், ஆடை கழுவுதல் உள்ளிட்ட அனைத்தும். (இதைப்படிக்கும்போது யாழ்ப்பாணத்திலுள்ள மெலிஞ்சிமுனை உள்ளிட்ட பல தீவுப்பகுதிக் கிராமங்களின் காட்சி உங்களுக்கு மனதில் விரியலாம்). (“தண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு” தொடர்ந்து வாசிக்க…)
‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல்
(மொஹமட் பாதுஷா)
ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. (“‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல்” தொடர்ந்து வாசிக்க…)
‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்
அரசியல் தொழிற்சங்க பேதமின்றி இணைவோம்
மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பில் நேற்று (01-09-2018) இடம் பெற்ற மக்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது ‘பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமை சம்மேளனம்’ (Plantation Labour Rights Confederation) என்ற பொது அமைப்பு தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்த ஏழு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் மூன்று தனிநபர்களையும் உள்ளடக்கிய 11 பேர் கொண்ட முன் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பின் வரும் நபர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
(“‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்” தொடர்ந்து வாசிக்க…)
புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)
இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.
(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)” தொடர்ந்து வாசிக்க…)
அடையாள அட்டை கட்டணம் உயர்வு
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த்திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீண்டும் படுகுழிக்குள் விழலாமா?
(கே. சஞ்சயன்)
இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி – பதில் வடிவிலான அறிக்கை ஆகும்.