வினைதிறன் மிக்க அரசியலுக்கு வித்திட்டுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரசன்ன ரணவீர நான்கு வாரங்களும் விமல் வீரவன்ச இரண்டு வாரங்களுக்கும் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

(“வினைதிறன் மிக்க அரசியலுக்கு வித்திட்டுள்ள பாராளுமன்றம்” தொடர்ந்து வாசிக்க…)

செயற்கை மதிநுட்பத்தால் திணறும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்

வியட்நாம் உலக பொருளாதார மாநாடு ஒரு நோக்கு

(விசு கருணாநிதி)

நான்காவது கைத்தொழில் புரட்சியில் ‘ஆசியானின்’ எதிர்காலம்

வியட்நாமில் நடைபெற்ற உல கப் பொருளாதார மேடையில் முக்கிய பேசுபொருளாகக் காணப்பட்டது நான்காவது தொழில் புரட்சி. அதுவும் செயற்கை மதிநுட்ப (Artificial Intelligence) அச்சுறுத்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதைப்பற்றியதாகவே இருந்தது.

(“செயற்கை மதிநுட்பத்தால் திணறும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 08)

(Thiruchchelvam Kathiravelippillai)
கந்தளாயைச் சேர்ந்த சிற்றம்பலம் விடுதலைப் புலிகளில் தன்னைக் இணைத்துக்கொண்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்ரரின் வழிநடத்தலில் நெறிப்படுத்தப்பட்டவர்.சிற்றம்பலத்திற்கு கணேஸ் என விடுதலைப் புலிகள் பெயரை மாற்றி வைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செல்வாக்கினை மேலோங்கச் செய்தவர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 08)” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் உள்ள குளங்களை தூர்வார…….

யாழ் மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வாரி அவற்றின் நீர் கொள்ளளவை அதிகரிப்பதன்மூலம் நன்னீரை பேணுவதுடன் சுற்றுச்சூழலின் ஈரப்பதனை பேணமுடியும் கடந்த வருடம் நான்கு குளங்களையும் அவற்றின் உட்செல்லும் வெளிச்செல்லும் வாய்க்கால்கள் தூர் வாரி புனரமைக்கப்பட்டன. இவ்வருடம் இதுவரை 5 குனங்கள் தூர் வாரப்பட்டு அண்ணளவாக 2மில்லியன் மேலதிகமாக நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் உள்ள குளங்கள் தூர்வார வேண்டுமானால் 0773151500 இலக்க தொலைபேசியில் பேசவும். இச்சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது. வெளி நாட்டு நண்பர்கள்பலர் நிதியுதவி வழங்குகின்றனர். எமது எதிர்கால நீர்த்தேவையை காக்கப்பதற்கு முன்வாருங்கள்.

தகவல்: Markandu Ramathasan

 

மரண அறிவித்தல்

எனது உறவினரும்,வகுப்பு நண்பனும்,முன்னாள்கட்சித் தோழருமான (முகுந்தன்)தியாகராசா ரவிச்சந்திரனின் மறைவையிட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். – Comrade Kiruba

கூட்டமைப்பிற்கூடாகவே மாற்றுத் தலைமை வரவேண்டும் கட்சியை நடத்துவோர் தவறை உணர வேண்டும்

(வாசுகி சிவகுமார்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதற்குக் கூட்டமைப்பைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் தமது தவறை உணரவேண்டும் என்றும் அவர் வாரமஞ்சரிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

(“கூட்டமைப்பிற்கூடாகவே மாற்றுத் தலைமை வரவேண்டும் கட்சியை நடத்துவோர் தவறை உணர வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?

(கே. சஞ்சயன்)

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.

(“மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?

(அனுதினன் சுதந்திரநாதன்)

இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள்.

(“இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?” தொடர்ந்து வாசிக்க…)

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி

(ச. சந்திரசேகர்)

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது.

(“ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி” தொடர்ந்து வாசிக்க…)

பதில் முதலமைச்சராக மறுதபாண்டி​ ராமேஸ்வரன்

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளமையால், பதில் முதலமைச்சராக, மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாச்சார மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மருதுபாண்டி ராமேஸ்வரன், நாளை (21), கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(“பதில் முதலமைச்சராக மறுதபாண்டி​ ராமேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)