இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தலையிடுவதற்கு சீனா முயல்கிறது என்ற, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விமர்சனத்தை, சீனா நிராகரித்துள்ளது. ஐ.அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கான தீர்வையை அதிகரிக்கும் முடிவை சீனா எடுத்தமை மூலமாகவே, அந்நாடு இவ்வாறு முயல்கிறது என, ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
Month: September 2018
‘மீளவும் முன்னிலைக்கு வர வேண்டும்’
கல்வியில் முன்னிலையில் இருந்த யாழ்ப்பாணம் தற்போது பின்னடைவைச் சந்தித்திருக்கின்ற நிலையில் மீளவும் முன்னிலைக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அத்துடன், கல்வி மற்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான முன்னேற்றத்துக்கு அரசியல்வாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை போராட்டம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், நாளை (21) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால், நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
’ஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்’
ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாள்களுக்குள் அடக்குவோமென, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அத்துடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோமெனவும் அவர் குறிப்பிட்டார். பலாலி இராணுவ தலைமையகத்தில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
’சரணடைந்தவர்களை புலிகளே சுட்டுக் கொன்றார்கள்’
இராணுவத்தினரிடம் சரணடைந்த ரமேஷ் கொல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, தான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகங்களே தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(“’சரணடைந்தவர்களை புலிகளே சுட்டுக் கொன்றார்கள்’” தொடர்ந்து வாசிக்க…)
செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. அச்செய்திகள் வலியன. எமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைத் தீர்மானிக்க அவை உதவக்கூடும்.
(“செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்” தொடர்ந்து வாசிக்க…)
’இலங்கையிலிருந்து 100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு’
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சுக்கும் இடையில், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையிலிருந்து 100 தமிழ் மொழி மூல ஆசிரியர்களை, ஆசிரியர் பயிற்சி நெறிகளைப் பெற்றுகொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
முதுபெரும் கம்யூனிஸப் போராளி
முதுபெரும் கம்யூனிஸப் போராளியான ஆந்திராவைச் சேர்ந்த
கொண்டபல்லி கோட்டேஸ்வரம்மா இன்று அதிகாலை தனது 100வது வயதில் காலமானார். மக்கள் யுத்தக் கட்சியின் நிறுவனர் கொண்டபல்லி சீதாராமையாவின் வாழ்க்கைத் துணைவர் கோட்டேஸ்வரம்மா. செவ்வணக்கம்
தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 7)
(Thiruchchelvam Kathiravelippillai)
அம்பாறை மாவட்டத்தில் தமது நிலையான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது. 1985 இலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வாழ்கின்ற ஊர்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டவண்ணமிருந்தன. தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற போது தமிழ் மக்கள் அச்சமடைவதுடன் முஸ்லிம் மக்களுடன் பகையுணர்வினையும் வளர்க்க வேண்டும் எனபது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 7)” தொடர்ந்து வாசிக்க…)
விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன.
(“விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்” தொடர்ந்து வாசிக்க…)