துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன.

(“துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார்.

(“விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து” தொடர்ந்து வாசிக்க…)

இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது – வடமாகாண கல்வி அமைச்சர்

இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது என்றொரு சுற்றுநிருபத்தை வடமாகாண கல்வியமைச்சு அறிவிக்கப் போவதாக கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் சொல்லியிருக்கிறார். எந்தக் கலை வடிவத்தை எங்கு, யார் நிகழ்த்த விரும்புகிறார்களோ அவர்கள் அங்கு அப்படி நிகழ்த்துவதை தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ அமைச்சுகளுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரமில்லை. ஆடும் கலைஞர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

(“இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது – வடமாகாண கல்வி அமைச்சர்” தொடர்ந்து வாசிக்க…)

மனதில் வருத்தத்தை ஏற்படுத்தாத இயற்கை மரணம்

(சாகரன்)

அண்மையில் உலகத்தின் ‘முக்கிய” இராஜதந்திரி ஒருவரின் இயற்கை மரணம் நிகழ்ந்தது. ஊடகங்கள் இவரின் மரணத்திற்கு வானளவில் புகழாஞ்சி சூட்டி தமது கடமை முடிந்தது என்றும் திருப்திப்பட்டுக் கொண்டனர். உலக வரலாற்றில் இன்று வரை ‘அடிமைகள்’ என்ற அடைமொழி ஒடுக்கு முறையை சந்தித்து வந்த கறுப்பின மக்களின் வழித் தோன்றல் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களையே குறிப்பிடுகின்றேன். உலகத்தின் பல நாடுகளில் வலிந்த தாக்குத்தலை மேற்கத்தேய கூட்டணி நடாத்திய போது இதனை தடுக்காது இதற்கு அனுமதியும் கொடுத்த கால கட்டம் இவரின் செயலாளர் கால கட்டம்.

(“மனதில் வருத்தத்தை ஏற்படுத்தாத இயற்கை மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

பா.ஜ.கவின் கூட்டணித் தூது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்

(எம். காசிநாதன்)

கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்திடம், கூட்டணிக்கு அழைப்பு விடும் கூட்டமாக, ஓகஸ்ட் 30 ஆம் ​திகதி நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நிதின் கட்ஹரி, காஷ்மிர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்று, கருணாநிதியின் சாதனைகளை எடுத்துரைத்தார்கள். (“பா.ஜ.கவின் கூட்டணித் தூது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘இராணுவத்தினர் வசம் 4,500 ஏக்கர் உள்ளன’

யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளனவென, யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், அக்குழுவின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த ​சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?

(அதிரதன்)

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

(“அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தனர் என்றுத் தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், துரோகிகள் என்று அழைத்த எமது கட்சியினர் தான், உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் அந்தத் ‘துரோகி’களுடன் இப்போது கூட்டு வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)

யாழ்ப்பாணப் பயணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனது குடும்பத்துடன் எமது நட்புக் குடும்பம் ஒன்றின் பிரதான ‘புரோக்கிராமிற்குள்’ இணைக்கப்பட்டதே எனது பயண அனுபவங்கள். எனக்கான தனியான பயண விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடிய வாய்புகள் எனக்கு அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் மற்றயவர்களின் பயணச் செயற்பாட்டிற்குள் என்னை இணைத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றேன். அவற்றை பதிவு செய்ய விளைகின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)

நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?

உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுதலித்துக் குரலெழுப்பியிருக்கிறார்கள். யுத்தத்திற்குப் பிறகு முல்லைத்தீவில் போராட்டமொன்றுக்காகக் கூடிய மிகப் பெரிய மக்கள் திரள் இது. (“நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)