me too

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

‘மீ டூ’என்ற கோஷத்துடன் உலகில் உள்ள பல பெண்கள், வேலைசெய்யுமிடங்களிலும், படிக்குமிடங்களிலும்.அத்துடன் அவர்கள் நம்பிக்கையாகப் பழகும் ஆண்கள்; அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளைச் சொல்ல அக்டோபர் மாதம் 5ம் திகதி 2017ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள். 2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹொலிவுட் படவுலகின் பிரபலமான ஹார்வி வெயின்ஸ்ரெயின் என்பரின் பாலியல்க் கொடுமைகளைச் சொல்வதை நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது. வேயின் ஸ்ரெயினின் காமலீலைகள் பற்றிய கொடுமைச் செயல்களை அமெரிக்க நடிகைகளான றோஸ் மக்கோவன்,ஆஷ்லி றட் என்ற நடிகைகள் அம்பலப் படுத்த முன்வந்தனர். அதைத் தொடர்ந்து பிரித்தானிய நடிகையான றொமெலா கைரி என்பவரும் 9.10.18ல் முன்வந்தார். (“me too” தொடர்ந்து வாசிக்க…)

விக்கினேஸ்வரனும் அவரது 40 நேர்மையற்ற திருடர்களும்

(Arun Ambalavanar)

பூகோள நடைமுறை யதார்த்தங்கள் அறம் என்பவற்றை கருத்திலெடுக்காத சுயநல சந்தர்ப்பவாதிகளும் Demagogy என்கிற அரசியல் வாய்ச்சவாடலை மட்டுமே முலதனமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் கூட்டணி இனிவரும் வடமாகாணசபைத்தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடிய அளவில் வாக்குகளை வெல்லப்போவதில்லை. எதிர்க்கட்சியாகுமளவுக்குக்கூட அதன் வாக்கு பலம் இல்லை. இதற்கான ஆதாரத்தை நடந்துமுடிந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளில் காண்க. வாக்களிக்கும் கோலங்களில் ஆய்வுசெய்தால் சாதி முக்கியமான ஒரு காரணி. விக்கியரின் கட்சிக்கு கிடைக்க்கூடிய சாதிய வாக்குகள் இல்லை. யாழ் நகரை அண்டிய சில வெள்ளாள மேட்டுக்குடியினர் வெள்ளாள மாணவர் வெள்ளாள இளைஞர்தான் விக்கியரின் கட்சியின் பலம். இன்றைய விக்கி கட்சி அங்குரார்ப்பணத்தில் முக்கியமாக கலந்துகொண்ட மாலையிட்டு படங்காட்டிய அமைப்பு வட்டு இந்து வாலிபர் சங்கம். இது ஒரு கடுமையான வெள்ளாளர் சங்கம். வெள்ளாளர் மட்டுமே இச்சங்கத்தில் அங்கத்தவராகலாம்.

(“விக்கினேஸ்வரனும் அவரது 40 நேர்மையற்ற திருடர்களும்” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திருகோணமலை தமிழர் சமூக ஐனநாயக்கட்சி செயற்குழு உறுப்பினர் செபஸ்தியன்(ரவி) மற்றும், காலம் சென்ற கிருபா ஆகியவர்களின் தாயார் காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.

OPERATION விக்கி!

புரட்சி நாயகன் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல கிளம்பிவிட்டார். சிங்களதேசத்தின் மீது படையெடுப்பு நடத்துவதற்காக குதிரையின் மீது ஏறிவிட்டார். கட்சியும் காட்சியும் அவர் தலைமையில் விரிந்தெழும்ப, அவரை குதிரையில் ஏற்றிவிட்டவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரிக்க, தனது வெண்ணிற கேசத்தை தடவி விட்டபடி புதுயுகம் படைக்கப்புறப்பட்டிருக்கிறார். (“OPERATION விக்கி!” தொடர்ந்து வாசிக்க…)

சிதைக்கப்படும் தமிழரின் பலம்

(கே. சஞ்சயன்)

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது. வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான்.

(“சிதைக்கப்படும் தமிழரின் பலம்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………!(Part 10)

கொழும்பு கதிர்காமம்(திசமஹரகம) வரையிலான தோராயமாக 275 கிலோ மீற்றர் தூரத்தை இலகு பயணமாக்க அமைக்கப்பட்ட தெற்கு அதி வேக விரைவு சாலை மக்களுக்கு(பாமர மக்களுக்கு அல்ல) சில சௌகரியங்களை செய்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் இதற்குள் ஒரு சோகம் நிறைந்துதான் காணப்படுகின்றது. கிராமங்களை, உறவுகளைப் பிரித்து ஊடறுச் செல்லும் இந்த சாலை உறவுகள் சந்திக்க வேண்டின் சாலையில் இரு மருகிலும் உள்ளவர்கள் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மிகக்குறுகிய இடவெளிகளில் மேம் பாலங்களை அமைத்தல் என்பது தற்போதைக்கு சாத்தியமற்ற நிலமைகள் காணப்படுவதினால் இது சாதாரண பாமர் மக்களின் உணர்வுகளை பாதிப்படையச் செய்திருக்கின்றது. கட்டணம் செலுத்தும் போக்குவரத்து முறமைகளும் மத்திய தர மேல்தட்டு மக்கள் வரைக்கும் கட்டணம் செலுத்தி பயணிக்க முடிகின்றது. சாதாரண உழைக்கும் மக்கள் இந்த அதி வேக சாலையை பயன்படுத்த முடிவதில்லை. இரு வழிப்பாதையின் நடுவில் அழகாக நாட்டப்பட்டு பச்சை பசேல் என பராமரிக்கப்படும் அழகு செடிகள் மேற்குல எங்கும் காணமுடியாக அழகுதான் இதே மாதிரியான செயற்பாட்டை தமிழ் நாட்டின் வேக சாகைளின் நடுவில் ரோஜா செடிகளை நட்டு அவ்அவ் பிரதேச மக்களால் பராமரிக்கப்படும் அழகு என்னை கவர்ந்தது உண்டு.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………!(Part 10)” தொடர்ந்து வாசிக்க…)

ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்

(Gopikrishna Kanagalingam)

ஊடகவியலாளர் ஜமாலின் கொலை தொடர்பில், வெள்ளை மாளிகைக்கு வெளியே அண்மையில் (19) இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போன்று வேடமிட்ட ஒருவர், கைகளில் இரத்தத்தோடு காணப்படுகிறார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர் காணாமற்போன சர்ச்சை, ஒருவாறு முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சோகமான தகவல் மூலமாகத் தான், அதன் முடிவை நோக்கிய பயணம் ஏற்பட்டிருக்கிறது என்பது, கவலைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது.

(“ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது…..

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலம் செய்யும் விந்தையை என்னவென்று சொல்வது? காலம், பொறுத்திருந்து நகைத்துத் திருப்பித் தாக்கும்போது, அதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறெதையும் செய்ய முடிவதில்லை. தன்னை நகைத்தவர்களுக்கான, உலக இயல்பை ஏளனம் செய்தவர்களுக்கான பதிலை வரலாறு, அதிகாரத்துடன் வழங்கிவிட்டு அமர்ந்திருக்கும்போது, ‘எல்லோரும் வரிசையில வாங்கடா’ என்று அழைப்பது போல் இருக்கிறது. இந்தக் கதை சுவையானது; காலம், சலனமெதுவுமின்றி வரலாற்றை மீள எழுதிச் செல்லும் அழகு, இரசிக்க வைக்கிறது. (“பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது…..” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் சி.வி

அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அரசியலில் தொடரப் போவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் ஆலய வடக்கு வீதியின் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை
ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒன்றுகூடலிலேயே மேற்படி கருத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான சி.வி விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார். அந்தவகையில், தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரிலேயே தனது கட்சியை விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் -SDPT

பத்திரிகைகளுக்கான அறிக்கை 22-10-2018

புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் இப்போது இருக்கின்ற மாகாண சபை ஆட்சி முறையை சுயாதீனமும் ஆற்றலும் கொண்டதாக ஆக்குவதே தமிழ் மக்களின் உடனடித் தேவை. 2016ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு கிடைக்கும்! 2017ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு வரும்! பின்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு 2018ம் ஆண்டுக்குள் முடிவுகள் கிட்டும்! என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு பற்றி ஆண்டுக்காண்டு மாற்றி மாற்றி ஆரூடம் கூறி சத்தியமளித்தனர்.

(“புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் -SDPT” தொடர்ந்து வாசிக்க…)