(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது. 1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர். இதுவே படையினரின் முதலாவது பாரிய சுற்றிவளைப்பாகும். காடுகள், கடற்கரை, ஆற்றங்கரை, துறையடி என அனைத்து இடங்களிலும் படையினர் செறிவாகக் குவிக்கப்பட்டனர்.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலங்கேணியிலிருந்து 12 கி.மீ.தூரத்திலுள்ள கண்டக்காடு, இறவடிச்சேனை, தளவாய், ஜபார்திடல் ஆகிய இடங்களில் கால்நடை வளர்ப்பிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். இவ்விடங்களுக்குச் செல்வதற்கு மூன்று வழிகளை மக்கள் பயன்படுத்தினர். மாவுசாப்பா துறை வழி, கண்டக்காட்டு துறை வழி, உப்பாற்றுத்துறை வழி. உப்பாற்றுத்துறை வழியினை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தவில்லை.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 13)” தொடர்ந்து வாசிக்க…)