நாட்டில் ஜனநாயகக் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பெருமை கொள்ளும் இன்றைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் தனது இயலாமையையே தொடர்ந்து காட்டி வருகின்றது. நாட்டின் பருமட்டான பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும், – சாதாரண மக்களினது வாழ்க்கைத் தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கும் கடந்த அரசாங்கம் பெருமளவில் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன் சுமைகளையும், அமெரிக்காவின் அண்மைக்கால பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச சந்தையில் தற்காலிகமாக ஏற்;பட்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வையும் காரணங்களாகக் காட்டி தனது பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முற்படுவதாகவே தெரிகின்றது.
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை உடனடியாக மிகப் பெரிய அளவில் உயர்த்துவது அரசின் அநாவசிமான பதட்டத்தையே காட்டுகிறது. அமெரிக்க டொலர் தொடர்பான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி 5 சதவீதமளவிலேயே ஏற்பட அரசாங்கமோ பெற்றோலியப் பொருட்களின் விலைகளையும் போக்குவரத்து கட்டணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளையும்; 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் தமது பொருளாதார வாழ்வு தொடர்பான பயக் கெடுதிகளையே அரசாங்கம் வளர்த்து விட்டுள்ளது. வர்த்தக முதலாளிகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விலைகளை உயர்த்துவதை உடனடியாகவே செய்வார்கள் ஆனால் என்ன காரணம் கொண்டும் பின்னர் விலைகளைக் குறைக்கமாட்டார்கள் என்பது பொதுவாகத் தெரிந்ததே. விலைக் குறைப்புகளை அரசாலும் செய்ய முடிவதில்லை. எனவே மக்களின் வாழ்க்கைச் செலவுகளின் திடீர் உயர்வுக்கு காரணமாக அரசு செயற்பட்டுள்ளமை சாதாரண மக்களின் அடிப்படை வாழ்வாதார நலன்களுக்கு விரோதமானதாகும்.
(“ஊடகங்களுக்கான அறிக்கை – 12-10-2018” தொடர்ந்து வாசிக்க…)