முன்னாள் வடமாகாண முதலமைச்சரை நான் எப்போதோ நிராகரித்து விட்டேன். அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை என மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து சமய காலாச்சாரம் மற்றும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்ற முன்னாள் முதலமைச்சர், ஈபிடிபியை இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Month: November 2018
இந்திய வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையாமல் பேணுவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(“இந்திய வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது
பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று மட்டக்களப்பு வவுணதீவுக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோரே, அந்த குழுவில் அங்கம் வகித்துள்ளனர். (“ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது” தொடர்ந்து வாசிக்க…)
“புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு புலம்பெயர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் உதவி செய்து வரும் மாற்றுவலுவாளரைச் சந்தித்துப் பேசச் சென்றோம். நாங்க்ள் சந்தித்த அந்த மாற்றுத்திறனாளி, தன்னுடைய பிரச்சினைகளையும் துயரங்களையும் விட, தன்னைப்போலச் சிரமங்களின் (பாடுகளின்) மத்தியிலிருப்போரைப் பற்றியே பேசினார். (““புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்
கடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான சுபீட்சம் நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் சடுதியாக நிகழ்ந்த அரசியல் சூறாவளியால் எல்லாம் தலைகீழாகி விட்டது என்றாகிவிடாது. இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றன என்பதையே இன்றைய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. (“இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)
ஐ.தே.கவின் அரசியலில் ’சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை’
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது என்ற கருத்தில், எதுவித உண்மையுமில்லையெனத் தெரிவித்த ஐ.தே.கவின் சிரேஷ்ட எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல, அவ்வாறான கருத்துகள், முழுப்பொய்கள் எனவும் தெரிவித்தார்.
(“ஐ.தே.கவின் அரசியலில் ’சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)
மஹிந்த – ரணிலுக்கு பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்டுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள யோசனை குறித்து சபையில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவல் அநுரகுமார திசாநாயக்க, இந்த யோசனையை நிறைவேற்றிக்கொண்ட பின்னர், அலரி மாளிகையிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டுமென்றார். காரணம், அங்கு அவர்கள் செய்யும் செலவுகளையும், பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டே செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாதெனவும் கூறினார்.
அகதிகள் மெக்ஸிக்கோவில் காத்திருப்பர் என்கிறார் ட்ரம்ப்
ஐக்கிய அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையிலுள்ள அகதிகள், அவர்களின் அகதிக் கோரிக்கைகள் தனித்தனியாக ஐக்கிய அமெரிக்க நீதிமன்றங்களில் அனுமதிக்கப்படும் வரை அவர்கள் மெக்ஸிக்கோவிலேயே இருப்பர் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று டுவீட் செய்துள்ள நிலையில், தாங்கள் எந்தவொரு இணக்கத்துக்கும் வரவில்லையென மெக்ஸிக்கோவில் புதிதாகப் பதவியேற்கவுள்ள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(“அகதிகள் மெக்ஸிக்கோவில் காத்திருப்பர் என்கிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)
’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’
கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதி இடமான டெய்ர் எஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இரண்டு நாட்களாக நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகளின் படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்றுத் தெரிவித்துள்ளது. ஈராக்கிய எல்லையிலுள்ள கிழக்கு மாகாணமான டெய் எஸ்ஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை வெளியேற்றுவதற்காக சிரிய ஜனநாயகப் படைகள் போரிடுகின்றன.
(“’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’” தொடர்ந்து வாசிக்க…)
கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும், ரூ.10 கோடி நிதியும் கேரள அரசு சார்பில் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.