நீர்கொழும்பில் அமைந்துள்ள இக்கடல் நீரேரியானது மூன்று மணிநேர மீன்பிடி அமர்வோடு, கடற்கரையிலிருந்து கரையோரத்தில் துவங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் காலை 8:00 மணி அல்லது மாலை 3:00 மணிக்கு காலை காலை அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் விளையாட்டு மீன்பிடி உபகரணங்கள் என்பன அங்கு வழங்கப்படுவதோடு, வழிகாட்டி ஒருவரும் துணைக்கு நியமிக்கப்படுவார்.
Month: November 2018
உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்
(A.P.Mathan)
இலங்கையில் திடீரெனப் பிரதமரை மாற்றிய ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு, இந்தியாவுக்கான பயண ஆயத்தத்தில் இருந்தோம். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், இலங்கையிலிருந்து ஊடகத்துறைசார்ந்த 20 பேருக்கான சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணம், மும்பாயை நோக்கியதாக இருந்தது. ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலையில் மும்பாய்ப் பயணம் தொடங்கியது.
(“உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்” தொடர்ந்து வாசிக்க…)
தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
(“தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)
பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்
(கே. சஞ்சயன்)
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது.
’மஹிந்தவின் நியமனத்தை ஐ.தே.க ஏற்றது’
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
(“மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)
ட்ரம்ப்பை எதிர்க்கிறார் இம்ரான் கான்
பாகிஸ்தான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன்மூலம், ஒரு காலத்தில் மிக நெருங்கிய தோழமை நாடுகளாக இருந்த இவ்விரு நாடுகளும், தமக்கிடையிலான முரண்பாடுகள் மூலம், அதிக இடைவெளியே ஏற்படுத்திய வண்ணமுள்ளன.
தமிழ்த்தேசியத் தலைமைக்கு
(நடேசன்)
ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். TAMIL SINHAL POLITICSஅதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.
தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த எச்சரித்துள்ளார்.
(“தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)
சி.வியின் கோரிக்கை நிராகரிப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்துவந்த கோரிக்கையை, கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.