(தோழர் ஸ்ரனிஸ்)
அன்னை இந்திராகாந்தி அலகாபாத்தில் 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பிறந்தார். ,இந்தியாவின் நலன்களுக்கும்,பிராந்திய நலன்களுக்கும்,உலக அமைதிக்காவும்; அயராது பாடுபட்ட மாபெரும் தலைவர் அவர். தோழர் பத்மநாபா இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை எனும் இத்தில் நவம்பர் 19, 1951 இல் பிறந்தார். இலங்கையின் பல்லின மக்களின் வளர்ச்சிக்காகவும்,பிராந்திய நலன்களுக்காகவும்,உலக அமைதிக்காகவும் அயாராது பாடுபட்ட மாபெரும் தலைவராவார்.
அன்னை இந்திராவும்,தோழர்பத்மநாபாவும் நாளும் பொழுதும் மக்களைப்ற்றியே சிந்திப்பதாலும் சாதாரண மக்கள் தொடர்பாகவும,;,அவர்களது வாழ்வின் உயர்வுக்கு அயராது பாடுபட்டதாலும்,அவர்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவோ,அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ அக்கறை கொள்ளவில்லை. (“19.11. அன்னை இந்திராகாந்தி ,தோழர்பத்மநாபா பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)
Month: November 2018
மைத்திரி-ரணில் முதன்முறையாக உரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்றுக்காலை முக்கிய உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் தொலைபேசியில், சில நிமிடங்கள் உரையாடியுள்ளனர் என, இருதரப்பு வட்டாரத் தகவல்களும் தெரிவித்தன. ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் இருவரும் முதல்தடவையாக நேற்று (18) பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, இலங்கை அரசியலில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தான் தீர்மானிக்க வேண்டுமெனில் குறித்த வாக்கெடுப்பானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையிலோ முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
(“‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’” தொடர்ந்து வாசிக்க…)
புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
(“புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)
ரணில் எனும் பச்சைக் கள்ளன்?
இலங்கை அரசியலில் சுமார் நாற்பதாண்டுகளிற்கு மேலான அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இதுவரை அரசியலில் சாதித்தது தான் என்ன? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவல்ல முதிர்ச்சிடைந்த தலைமைப் பண்பு (statesmanship) அவரிடம் இருக்கிறதா? இலங்கையையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வல்ல ஆற்றல் (ability) அவரிடம் இருக்கிறதா போன்ற கேள்விகள் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது.
தோழமை தினம்
திருகோணமலையில் நாளை (19.11.2018) தோழர் பத்தமநாபாவின் 67வது பிறந்த நாளையொட்டி தோழமை தினம் நினைவு கூரப்படுகின்றது. வருடம் தோறும் நினைவுகூரப்படும் இத்தோழமை தினம் இம்முறை திருகோணமலையில் நினைவு கூரப்படுவதுடன் தோழர் பத்மநாபாவின் உருவச்சிலையும் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.இதற்கான செயற்பாடுகளை தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT) திருமலை மாவட்ட செயலாளர் தோழர் சத்தியன்( சி.சிவகுமார் ) தலைமையில் தோழர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
பொறுமை இழக்கலாமா?
நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? ஒவ்வொரு பிரஜையும் எழுப்புகின்ற கேள்வி இது. உயரிய மக்கள் சபையான பாராளுமன்றம் கூட்டப்படுவதும், அடிதடி சண்டைகளுடன் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றில் நடக்கின்ற மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகளை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும் ஏக்கப் பெருமூச்சு ஒன்றுதான் அவர்களது உணர்வு வெளிப்பாடாக இருக்கின்றது.
ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்
தங்கள் ஏழ்மையை ஓரளவுக்கு இது துடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்
(யது பாஸ்கரன்)
இலங்கையின் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இவ்வாறு இந்த மாவட்டத்தின் வறுமைக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினேழாயிரத்துக்கும் அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதே காரணமாக அறிய முடிகின்றது. அதுபோல மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மை காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் அல்லப்படுகின்றன.
(“ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே
70 ஆண்டு சுதந்திரத்தின் உச்ச கட்ட சீரழிவு
(சிராஜ் மஷ்ஹூர்)
1948 இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இப்போது 2018 இல் இருக்கிறோம். இந்த 70 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தீர்க்க முடியாத பாரிய இழப்புகளும் வேதனைகளுமே எஞ்சியிருக்கின்றன. மிகப்பெரும் சீரழிவுகளே தொடர்கதையாகி வருகிறது. ஐ.தே.க. வும், சு.க வுமே இந்தச் சீரழிவின் பிரதான பங்குதாரர்கள்.
(“இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே” தொடர்ந்து வாசிக்க…)