நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்காலத்தடை தொடர்பில் சுமந்திரனை முன்னிறுத்தி பாடப்பட்டுவருகின்ற வழிபாடுகள் சமூக வலைத்தளமெங்கும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதேவேளை சிறிலங்காவின் நீதித்துறை குறித்து பிரதஷ்டை அடிக்கும் அடியார்கள் கூட்டமொன்றும் முகநூலில் அதிகரித்திருக்கிறது. இவை இரண்டுமே தமிழ் மக்களின் அரசியலுக்கும் இருப்புக்கும் ஆபத்தானது.
Month: November 2018
இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது.
“இலங்கையில் நீதித்துறையும் அரசியல் அதிகாரத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளது. நீதியாளர்களும் விலைபோயிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்ட அபிப்பிராயங்களுக்கு மாறாகவே உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது ஓரளவு ஆறுதலளிக்கும் விசயம்.
(“இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது” தொடர்ந்து வாசிக்க…)
தோழர் வீ.ஏ. கந்தசாமி அவர்களின் 26ம் ஆண்டு நினைவு தின கூட்டம் இன்று யாழ் நூலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது
ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி
(புருஜோத்தமன் தங்கமயில்)
குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அப்படியான, சமூக – அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால், நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி, அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே, ‘ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டு’ம் முழிக்கிறார்.
(“ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)
நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு, நாளை (14) காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, நாளை (14) ஆம் திகதி வரையிலும், கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அவர், கடந்த வெள்ளிக்கிழமை (9) நாடாளுமன்றத் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
(“நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்” தொடர்ந்து வாசிக்க…)
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு
‘யாழில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனி அதிகரிக்கப்படும்’
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். அதன் ஓர் அங்கமாக, தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை, இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (“‘யாழில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனி அதிகரிக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)
காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்
(ஜெரா)
இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். (“காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்” தொடர்ந்து வாசிக்க…)
‘தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்’
தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படுவதற்கு முன்னர், சகல தமிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். “தெற்கு அரசாங்கம் இந்நாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளல், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளல் எவ்வாறு என்பது தொடர்பிலான சிந்தனையிலேயே இருக்கின்றன. அது ஒக்டோபர் 26ஆம் திகதி முதல், இதுவரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை வைத்து பார்க்கும் போது, தெட்டத்தெளிவாகின்றது” என்றார். (“‘தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்’” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 16)
(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் கண்டி-திருக்கோணமலை வீதியில் தம்பலகமம் உள்ளது. கந்தளாயக்குளம், வெண்டரசன்குளம், கல்மெட்டியாவகுளம், புலியூற்றுக்குளம், கடவாணக்குளம், சேனைவெளிக்குளம், போன்ற குளங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீர் மூலமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தம்பலகமம் வெளி என்பது ஏறத்தாள 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்படும் வயல்வெளியாகும்.
தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்நாட்களில் அரசபணி நிமிர்த்தமாக வாழ்ந்துள்ளனர். யாழ் வடமராட்சியிலிருக்கும் மக்களுக்கும் தம்பலகமம் மக்களுக்கும் நெல் வியாபாரம் மற்றும் நெற்செய்கை காரணமாக தொடர்புகள் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில் தம்பலகமத்திலிருந்து நெல் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர் தம்பலகமத்தில் வயல் நிலங்களை 10, 15, 20 ஏக்கர்கள் என்ற வகையில் தமதுடமையாக்கியுள்ளனர். இன்றும் தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத்தவர்களுக்கு வயல்நிலங்கள் உரித்துடையவையாக உள்ளன.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 16)” தொடர்ந்து வாசிக்க…)