(ஜனகன் முத்துக்குமார்)
ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடனான பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் நோக்கிலேயே சான்செலர் மேர்க்கல் முயன்று வருகின்றமை – தன்னை – தனது சான்செலர் பதவியின் காலப்பகுதிக்கு பின்னரான காலத்திலும் ஐரோப்பிய அரசியலில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே மேர்க்கல் செயற்படுவதாக பார்க்கப்படுகின்றது. (“பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு” தொடர்ந்து வாசிக்க…)