இலங்கையில்நடைப்பெற்றயுத்தகுற்றங்கள்தொடர்பாகநீதிகிடைக்கவேண்டுமானால்வெளிநாட்டுநீதித்துறையின்உள்நுழைவுஅவசியம்எனமுன்னாள்நீதியரசரும், வடக்குமாகாணமுன்னாள்முதலமைச்சரும்தமிழ்மக்கள்கூட்டணியின்தலைவருமானசி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
அவர்ஊடகங்களுக்குஅனுப்பிவைத்துள்ளகேள்விபதில்ஊடகஅறிக்கையில்மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இலங்கையின்நீதித்துறைதற்போதுசிறந்ததீர்ப்புக்களைத்தரத்தொடங்கியுள்ளன. எனவே, உள்நாட்டு நீதிபதிகள்குழாம்யுத்தக்குற்றவிசாரணைகளைநடத்தலாம்என்றும்வெளிநாட்டுஉள்ளீடல்கள்தேவையில்லைஎன்றும்கூறப்படுகிறது. ஒருநீதியரசராகஇருந்தஉங்களின்கருத்துஎன்னஎன்றகேள்விக்குபின்வருமாறுவிக்னேஸ்வரன்பதிலளித்துள்ளார். (“இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)
Month: December 2018
‘அமைச்சுப் பதவி வேண்டாம்’
அமைச்சரவையின் எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், தானும் ரிஷாட் பதியூதினும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெறமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சியினரின் கூட்டத்தில் இது தொடர்பான தமது அபிப்ராயங்களை தானும், ரிஷாட்டும் தெரிவித்ததாகவும் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய, எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (18), சபையில் அறிவித்துள்ளார். (“எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)
இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி
(ஜெரா)
இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். (“இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி” தொடர்ந்து வாசிக்க…)
‘மஹிந்தவால் எதுவும் செய்ய முடியாது’
மஹிந்த ராஜபக்ஷவால் இதுவரை எதையும் செய்ய முடியாது என்பதை புரிந்துக்கொள்வதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தான் கடந்த 50 நாள்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு- காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். (“‘மஹிந்தவால் எதுவும் செய்ய முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)
உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ
(ஜனகன் முத்துக்குமார்)
ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் முனைப்புக் காட்டுவதாகவே உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும், ஐரோப்பிய ஒன்றியத் தொடர் கூட்டத்தில், கூட்டு ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான தேவையை இந்த மாதம் ஆதரித்திருந்தனர். இந்த இரு நாடுகளும், வலுவான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாவன என்பது ஒரு புறமாக இருக்க, மறுபுறமாக, பொருளாதார – அரசியல் கண்ணோட்டங்களிலிருந்து, அவர்களுடைய வார்த்தைகள் வெறும் அரசியல் சார்ந்தது அல்லாமல், தீர்க்கமான ஒரு விவகாரம் என்பது நோக்கத்தக்கது. (“உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ” தொடர்ந்து வாசிக்க…)
முற்றுப்பெற்றது அரசியல் நெருக்கடி
(விசு கருணாநிதி)
நாட்டில் சுமார் ஐம்பது நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி முற்றுப்பெற்றுள்ளது. நாட்டு மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதோடு, அரசியல் கொந்தளிப்பு தணிந்திருக்கிறது. தணிந்தது என்பதைவிட முற்றாகத் தீர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். (“முற்றுப்பெற்றது அரசியல் நெருக்கடி” தொடர்ந்து வாசிக்க…)
சமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை
(ஜெஸ்மி எம்.மூஸா)
சமூக வலைப்பின்னல் ஊடகங்களுக்குள் சிக்கி அவ்வளர்ச்சி நிலைக்கேற்ப நகராதவன் இயங்குநிலையற்றவனாகவே கணிக்கப்படுகின்றான். உலகத்தைச் சுருட்டி உள்ளங்கைக்குள் வைத்து ஒரு நொடிப்பொழுதில் தகவல்களை அள்ளிக் கொள்ளும் அபார துறையாக மாறியிருப்பது சமூக ஊடகங்களே என மார்பு தட்டிக் கொள்ளும் தொடர்பாடல் யுகத்தில் நாம் வாழுகின்றோம். (“சமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை” தொடர்ந்து வாசிக்க…)
‘கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம்’
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஓர் அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரித்தார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கவில்லை எனவும் அதனால் தான், கூட்டமைப்பினர் மஹிந்த ராஜப க்ஷவுக்கு எதிராக வாக்களித்தனர் எனவும் தெரிவித்தார். (“‘கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம்’” தொடர்ந்து வாசிக்க…)
‘மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணையமாட்டார்கள்’
மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்துக்கொள்ள மாட்டார்களென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் இவ்வாறு தெரிவிப்பதற்குக் காரணம் குறித்த உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையெனவும், ஸ்ரீ.ல.சு கட்சியினர் அவ்வாறு செய்யமாட்டார்களென ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அறிவித்துள்ளதாக பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.