புதிய அரசாங்கமொன்று எதிர்வரும் புதன்கிழமைக்குள் அமைக்கப்படுமெனவும், அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுபினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். (“அடுத்த வாரத்துக்குள் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்” தொடர்ந்து வாசிக்க…)
Month: December 2018
இது ராகுலின் காங்கிரஸ்!
(வர்கீஸ் கே.ஜார்ஜ்)
பாஜகவை காங்கிரஸ் நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டிய மாநிலங்களில் மூன்றில் இனி காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியில் இருப்பார்கள்; கடந்த ஆண்டு குஜராத்தில் பாஜகவுக்கு உயிராபத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஆனால், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இப்போது ஆட்டம் சூடுபிடித்துவிட்டது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற ஓராண்டின் சாதனைச் சுருக்கம் இதுதான்.
கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. (“கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?” தொடர்ந்து வாசிக்க…)
‘தமக்கு விருப்பமான நபரை ஆட்சிக்கு கொண்டு வர கூட்டமைப்பு முயற்சி’
“தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தினூடாக தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது ரணிலை மாத்திரம் ஆட்சியில் இருத்துவது என்ற ஒன்றை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதாக” ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். (“‘தமக்கு விருப்பமான நபரை ஆட்சிக்கு கொண்டு வர கூட்டமைப்பு முயற்சி’” தொடர்ந்து வாசிக்க…)
‘நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது’
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது.
(“‘நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது’” தொடர்ந்து வாசிக்க…)
5 மாநில தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்துமா?- கலக்கத்தில் பாஜக; மகிழ்ச்சியில் காங்கிரஸ்
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மோடி ஏன் கைவிடப்பட்டார்?
மக்களவைத் தேர்தலுக்கு ஆறே மாதங்கள் இருக்கும் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவைக் கலங்கடித்திருக்கின்றன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. உளவுத் துறையின் அறிக்கை, தேர்தல் கணிப்பாளர்களின் கணிப்புகள் இவற்றுக்கெல்லாம் பிறகு, நிலைமையைக் கட்சி உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.
ஹூவாவே அதிகாரி கனடாவில் கைது: சண்டையில் கிழிந்த சட்டை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்றொரு சொல்லாடல் உண்டு. அது தொடர்பில்லாத இரண்டு விடயங்களைத் தொடர்புபடுத்துவது பற்றிய நயமான குறியீடு. அரசியலில் நடக்கும் விடயங்கள் பலவற்றை, இச்சொல்லாடல் மூலம் விளக்கவியலும். மேம்போக்காகப் பார்க்கும்போது, தொடர்பே இல்லாதது போலத் தெரியும் விடயங்களுக்குப் பின்னால், மறைந்துள்ள காரணிகள் வியப்பளிப்பன. அதுபோன்றதொரு நிகழ்வு அண்மையில் நடந்தேறியுள்ளது. (“ஹூவாவே அதிகாரி கனடாவில் கைது: சண்டையில் கிழிந்த சட்டை” தொடர்ந்து வாசிக்க…)
கெஞ்சினார் ஜனாதிபதி; மறுத்தார் சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கக் கோரியும் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலந்துகொள்ள வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
(“கெஞ்சினார் ஜனாதிபதி; மறுத்தார் சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது – கமல்ஹாசன்
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். (“புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது – கமல்ஹாசன்” தொடர்ந்து வாசிக்க…)