(விஜயன் சி)
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது…
எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..??
26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.
கற்றலினால் ஆன பயன் என்ன?
The Formula
(விஜயன் சி)
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது…
எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..??
26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.
கற்றலினால் ஆன பயன் என்ன?
கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். (“இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்!” தொடர்ந்து வாசிக்க…)
2018ம் ஆண்டிற்கான வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம் அமைப்பின் செயற்பாடுகள்
12/02/2018:- நிலாவெளி பிரதான வீதி இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வடிகான் துப்பரவு செய்யப்பட்டது.
28/07/2018:- புளியங்குளம் நாகம்மாள் ஆலயத்தில் சரிந்து வீழ்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.
(“வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம்” தொடர்ந்து வாசிக்க…)
மலையக அரசியல் வரலாற்றில் இலங்கை இந்திய காங்கிரஸ் இயக்கத்தில் செயற்பட்ட ஆளுமைகளில் இறுதியானவராக திருமதி. சிவபாக்கியம் ( பழனிசாமி) குமாரவேல் அம்மையாரை கொள்ளலாம். அவரது தந்தையர் என். எம். பழனிசாமி ( படத்தில் இருப்பவர்) இ.இ.காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர். அவரது பிள்ளைகளை பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வளர்த்துள்ளார். கலகா, கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா என எல்லா பிரதேசங்களிலும் இருந்து அம்மையாரின் சகோதரங்கள் வருகை தந்திருந்தார்கள். ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு வரலாற்று பின்புலம் இருந்ததை அறியமுடிந்தது. ” ஏன்.. மகன் அம்மாவை பார்க்க வரல” என ஒரு அழைப்பு கண்டியில் இருந்துவரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அ வரை வந்து நலம் விசாரித்து செல்வதுண்டு. ஒரு முறை குழந்தைகளையும் அழைத்துவந்து அம்மையாரின் வரலாற்றை சொல்லிக்கொடுத்தேன். இனி அழைப்பு வரப்போவதில்லை. இன்று இறுதியாக வழியனுப்பிவிட்டு திரும்புகின்றேன். இவர் போன்ற ஆளுமைகளை எழுத்தின் மூலமாக பதிவு செய்தல் அவசியம்.
முஸ்லிமோ ,தமிழரோ கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது அந்த மாகாண வாழ் மக்களின் அரசியல் உரிமையாகும்.மைத்திரியை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததில் கிழக்கு வாழ் தமிழ் ,முஸ்லிம்களின் வாக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கி உள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்தி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தியது தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளே. இது மைத்திரி வழங்கிய பிச்சை அல்ல, மைத்திரியை இம்மக்களே அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள் . இன்று இம்மக்களின் பெரும்பாலான அரசியல் பிரதிநிதிகள் மைத்திரியின் அரசியல் குழறுபடிகளை ஆதரிப்பதாக இல்லை. மைத்திரியை சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசியல் தலைவராக பார்க்கவும் ஒரு சிறு வாய்ப்பும் இல்லை .அதிருக்க கிழக்கு மாகாணம் என்பது தமிழரும் முஸ்லிம்களும் சமமாக வாழும் பிராந்தியமாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த மோசமான இரந்தம் சிந்தல், அழிவுகள், வளப்பங்கீடு தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் தமிழ் முஸ்லிம்களிடையே ஆழமான வடுக்களை ஏற்படுத்தி உள்ளது . இரு இனங்களின் சக வாழ்வு இப்பிராந்தியத்தில் அவசியமானதாகும். இப்பிராந்தியத்தில் பகை முரண்பாடுகளை இன்னும் ஆழமாக்க முடியாது.
வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்துக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும், அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என, விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார். (“‘கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவொன்றுக்குள் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டுக்குரிய ரீ யூனியன் என்ற தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற குறித்த மீனவர்கள் ஏழு பேரும் கடந்த வாரம் அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். (“பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை மீனவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி. விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
(“தலைமையை ஏற்கவும்: சி.விக்கு, சங்கரி அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)
இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபரிமலைக் கோவிலுக்குள், 50 வயதுக்குக் குறைவான இரு பெண்கள் இன்று உள்நுழைந்து, ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இதன்மூலம், வரலாற்றில் முதன்முதலாக, சபரிமலைக்குள் சென்று, பெண்கள் தரிசனம் செய்தனர் என்பது, ஆதாரத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (“சபரிமலைக்குள் பெண்கள்” தொடர்ந்து வாசிக்க…)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாகத் தெரியவருகிறது. இதேவேளை, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவாக, மஹிந்த அமரவீரவை ஏற்குமாறும், அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.