5 புதிய ஆளுநர்கள் நியமனம்

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு

1. மேல் மாகாணம் – அசாத் சாலி
2. மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’

சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்வானிலிருந்து ஸி ஜின்பிங்கின் கருத்துகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சீனாவில் காணப்படாத ஜனநாயக சுதந்திரங்களை விட்டுக்கொடுக்க தாய்வான் மக்கள் எப்போதும் தயாரில்லை என தாய்வான் ஜனாதிபதி சை இங்-வென் கூறியுள்ளார். (“‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. (“வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை

ஆந்திரா.
அனந்த்பூர் மாவட்டம் .
கம்பதுரு மண்டல் பகுதி.
ராம்புரம் கிராமத்தைச் சார்ந்த
மல்லப்பா ஒரு விவசாயி.

பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார். (“விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை” தொடர்ந்து வாசிக்க…)

”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?

(எம்.குமரேசன்)
கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘திய்ய’ என்கிற சாதியைச் சேர்ந்தவர். திய்ய சாதியைச் சேர்ந்தவர்கள் தென்னை, பனை மரம் ஏறுவது, கள் இறக்குவதை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். பினராயி விஜயனின் தந்தையும் கள் இறக்கும் தொழிலாளிதான். குடும்ப வறுமை காரணமாக, விஜயன் சிறு வயதில் பீடி சுற்றும் வேலைபார்த்துள்ளார் .சிறு வயதில் கள்ளும் பீடியும்தான் தனக்கு சோறு போட்டதாக சொல்லிக்கொள்வார் பினராயி விஜயன். மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி, தற்போது கேரள முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். (“”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவ முன்வருவோம்!!!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எமது பகுதி மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்… எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் முடியுமான அளவு பொருட்களை சேகரித்து வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று கையளிக்க சமூகத்தில் அக்கறையுள்ள இளைஞர்கள் ஊடாகவும், சமூக ஆர்வலர்கள் ஊடாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். ஆகவே தங்களால் முடிந்த உதவிகளை வெளிநாடுகளில் வசிக்கும் எமது நண்பர்கள், இப்பகுதி தனவந்தகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆலய பரிபாலன சபையினர்கள் கைகோர்த்து உங்களால் முடிந்த பணத்தினையோ, பொருட்களையோ தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.. நீங்கள் தரும் உதவித்தொகைக்கு கொள்வனவு செய்யப்படும் பற்றுச்சீட்டுக்கள் அடங்கிய கணக்கறிக்கைகள் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன் எங்கள் சேவை ஒரு வெளிப்படை மிக்கதாகவும், எந்தவித உள்நோக்கமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் கரங்களுக்கு செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.. தொடர்புகளுக்கு – 0777389113 Please முடியுமானவரை செயார் செய்து ஏனைவர்களுக்கும் தெரியப்படுத்தவும்..

2019….. புத்தாண்டு தினத்தில்…..

பெண்களின்
உரிமைக்கு எதிரான தாக்குதலுக்கெதிராக
கேரள பெண்கள் சமூகம்
சாதி மதம் பாராமல் திரண் (“2019….. புத்தாண்டு தினத்தில்…..” தொடர்ந்து வாசிக்க…)