யார் இந்த ஜெகன்? பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது?


பிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது? அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? உடலங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பவை யாவும் தெரிந்த ஒரே ஒரு நபர்ரும் இவை அனைத்துக்கும் உடந்தையாகவிருந்த குற்றவாளியுமே ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன்.

தளபதி பதுமனின் மேல்வீடு சிதைந்தது.

திருமலை மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர் கேணல் பதுமன். சிவசுப்ரமணியம் வரதநாதன் என்ற இயற்பெயர் கொண்ட பதுமன் இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து பின்னர் அவரின் முன்னாள் சகாவான கருணா எனப்படுகன்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் தலையீட்டில் விடுதலையாகியிருந்தார்.

மனித உரிமைகள் பேரவையில் புலிகளுக்கும் கால அவகாசம் வழங்கப்படுகின்றதா?

(பீமன்)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு ஜெனிவாவில் கடந்த மாதம் 25ம் திகதி ஆரம்பமாகி 22 ம் திகதி முடிவுக்கு வருகின்றது. நாளை 20ம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் பொறுப்புக் கூறலுக்காக இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கியதாக எடியூரப்பா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்: மறுக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர்

பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா ரூ.1800 கோடி வழங்கியதாக ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது; இலங்கையும் இணை அனுசரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், 40/1 என்ற புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையும், வாக்கெடுப்பின்றி, நேற்றைய தினம் (21) நிறைவேற்றப்பட்டது.

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை

(இலட்சுமணன்)

இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன.

SLFP-SLPP ஆகியவற்றுக்கிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையிலான, 2 ஆம் கட்ட கலந்துரையாடல் இன்று (21) இடம்பெறவுள்ளது. இக் கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இருதரப்பும் இணைந்து அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள புதிய கூட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. குறித்த இரு கட்சிகளுக்கிடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், இக் கலந்துரையாடல் தீர்மானமிக்க ஒன்றாக அமையுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

30வது நினைவுதினம்…..

19.03.1989 அன்று சம்பூரில் தோழர் மதன்லால் தலைமையில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்தின் மீது அரசபடைகளின் ஒத்துழைப்புடன் பதுமன் தலைமையிலான புலிகள் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் 6 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1- தோழர் மதன்லால் (வெங்கடசாமி நாயுடு-திருகோணமலை), 2-தோழர் கண்ணன் (வித்தியானந்தன்-கட்டைப்பறிச்சான்),
3- தோழர் ராகவன் (இமானுதின்-கிண்ணியா), 4-தோழர் அருச்சுணன் (ஜெயப்பிரகாஸ்-திருகோணமலை), 5.தோழர் மனோ (நாகேந்திரன்-மூதூர்),
6- தோழர் வினோத் (வினோத்-மணல்சேனை) ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டனர்.அனைவருக்கும் எமது புரட்சிகர அஞ்சலிகள்.

34வது நினைவுதினம்……

தோழர் குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 34 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும்.
ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் முக்கியத்துவம் மிக்க ஒருவராய் காத்திரமான பங்களிப்பை வழங்கியதுடன் ஈபிஆர்எல்எவ் இன் பிரச்சாரம் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களிலும் மக்கள் நலன் சார்ந்த இதர பணிகளிலும் அதிகம் பங்கெடுத்துக்கொண்ட ஒருவராக விளங்கினார்.சிங்கள மொழியை சரளமாக பேசவும் எழுதவும் கூடியவராக விளங்கினார்.
சமூக அடிப்படையில், வர்க்க ரீதியில், இன ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை போக்குவதற்காகவும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காகவும் அர்ப்பண உணர்வோடு உழைத்தவர். உள உரமும், வேகமாகச் செயற்படும் திறனும் கொண்ட தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் ஐ பலம் மிக்கதொரு ஸ்தாபனமாகக் கட்டியமைத்ததிலும், அதன் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்காற்றியவர்.
1985 பங்குனி 18ம் திகதி யாழ் பிரதான வீதிக்கு சமீபமாக குருநகர் பிரதேசத்தில் இராணுவத்தினர் மறைந்திருந்து நடாத்திய தாக்குதலில் தோழர் குமார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மரியாதைக்குரிய அணித்தலைவரும், அன்புக்குரிய தோழனுமான தோழர் றொபேட் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
தோழர் குமார் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குறுகிய காலமே பங்கெடுத்துக்கொண்ட போதும் நிறைவாகவும், நேர்த்தியாகவும், உறுதியோடும், கட்டுக்கோப்புடனும் பணிபுரிந்தார். ஈபிஆர்எல்எவ் இன் அத்தனை அரசியல் இராணுவ நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
அவரது பங்களிப்புக்களுக்காக தோழர்களாலும், நண்பர்களாலும், அவரை அறிந்த அனைவராலும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். எம் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் அவருக்கு எம் புரட்சிகர அஞ்சலிகள்.