ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்னும் கற்பிதத்தை, ஒரு குழந்தை பிறந்ததுமுதலே அதன் மனதில் விதைத்து பாலினச் சமத்துவத்தை அறவே ஒழித்து குழந்தையை வளர்த்தெடுக்கின்ற ஆணாதிக்கத்திலும் பெண்ணடிமைத்தனத்திலும் ஊறிக் கிடக்கும் பெற்றோர்கள் அவர்தம் குடும்பங்கள். இந்தக் கற்பிதத்தைச் சிறிதும் மாற்றமின்றி அல்லது இன்னும் கூடுதலாகப் பின்பற்றுகின்ற குடும்பங்களின் தெரு, ஊர், சுற்றுப்புறம்.
Month: March 2019
நிர்வாணம் அவமானம் அல்ல!
வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம்
கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்ககூடாது எனவும் சர்வதேச நீதி விசாரணையைக் கோரியும் கிழக்கு மாகாணத்தில் இன்று (19) இடம்பெற்ற ஹர்த்தாலுக்கு வடக்கு மாகாணத்திலும் ஆதரவு கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், வடக்கில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அநேகமான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. சில இடங்களில் காலைவேளை வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும் நண்பகலுடன் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்
(எம். காசிநாதன்)
கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது.
சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்
(மொஹமட் பாதுஷா)
மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர்.
ஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக நிற்கும் ‘தர்மயுத்த’ எம்.பி.க்கள்
முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்
(கே. சஞ்சயன்)
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமுலுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA)
அமுலுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஆகும். நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை( PTA) நீக்கி ஐ.தே.கட்சி அரசினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஜனநாயத்துக்கும் சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று முற்போக்கு சக்திகள் குரலெழுப்புகின்றன.Résultat de recherche d’images pour “ranil unp”
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இலங்கையின் வடகிழக்கில் தமிழர் சமுக ஜனநாயக கட்சி (S.D.P.T) இனால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி(Poster).
விக்கி போருக்கு பின்னான ஈழத்தின் சாபம்
விக்னேஸ்வரன் 19ம் நூற்றாண்டு மனிதன். அந்தக்காலத்தில் பொன். ராமநாதன் “பிரபு” கக்கூசிலிருந்தால் அவர் அங்கிருந்து வெளியேவந்து குளித்துவரும்வரை யாழ்தேவி அவருக்காகக்காத்திருக்கும். அந்தக்கக்கூஸ் மனநிலையிலிருந்து விக்கி கிழவன் இன்றும் மீண்டுவரவில்லை என்பதைத்தான் அவரது ” வெளிநாட்டில் கக்கூஸ் கழுவுவதைவிட உள்நாட்டில் தலைநிமிர்ந்து வாழலாம்” என்ற மகா அபாண்டமான கூற்று சொல்கிறது.