உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி தலை வர்கள் போட்டியிடும் 7 தொகுதி களில் போட்டியிடப் போவ தில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Month: March 2019
5 மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்கள் விவரம்
டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர்: திமுக முதன்மைச் செயலாளரான டி.ஆர்,பாலு (78), தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். தென் சென்னை தொகுதியில் மூன்று முறை வென்ற அவர், 2009-ல் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வென்றார். 2014-ல் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மீண்டும் ஸ்ரீபெரும் புதூரில் போட்டியிடுகிறார்.
’புதிய அரசமைப்பு மக்கள் அரசமைப்பாக இருக்க வேண்டும்’
புதியதொரு அரசமைப்பை கொண்டு வந்தால் அது மக்களின் அரசமைப்பாக இருக்க வேண்டுமேயன்றி அதனூடாக மதம், இனங்களுக்கிடையிலான பிரிவினைவாதத்தை தூண்டும் அரசமைப்பாக அது இருக்க கூடாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 52 நாள்கள் அரசாங்கம் தொடர்பில் பலரும் குற்றஞ்சுமத்துகின்றனர். எனினும் அதனூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிருபிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதாகத் தெரிவித்த அவர், அந்த குறுகிய காலத்திலும் மக்களுக்கான பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் அமைதிகாக்கும் படை: லெபனான்
(ஜனகன் முத்துக்குமார்)
கடந்தாண்டு இறுதியில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, மற்றுமொருமுறை ஒருமனதாக லெபனானில் குடிகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை இன்னொராண்டு குடியிருக்கச்செய்வய்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன், “இத்தீர்மானமானது நிலைமையை மாற்றக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர சாதனை” என்றும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, குறித்த தீர்மானம் அமைதிகாக்கும் படையினர் தமது செயற்பாட்டை செய்வதற்கு பூரணமான அதிகாரம், உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார். எனினும், மேற்குறித்த எதுவுமே குறித்த தீர்மானம் மூலம் நிகழப்போவதில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். மேலதிகமாக இத்தகைய கூற்றுக்கள் அமைதிகாக்கும் படை, லெபனிய அரசியலில் கட்டவிழ்க்கப்படவேண்டிய சிக்கல்களை புரிந்து கொள்ளாத நிலைமையையே நிரூபிப்பதாய் அமைகின்றது.
யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்?
(கருணாகரன்)
2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி நம்பினாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாரில்லை. ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் என்று உள்மனது சொன்னாலும் அதை நடைமுறையில் எப்படி ஏற்றுக்கொள்வது என்ற சிக்கல்கள் இருந்தன. இருக்காதே பின்னே, அவ்வளவு பெரிய இயக்கம். நாற்பதாண்டு காலப் போராட்டம். ஏராளம் படையணிகள். உலகமெங்கும் விரிந்த கட்டமைப்பு. வேண்டிய அளவுக்கு நவீன ஆயுதங்கள். போதாதென்று உயிரையே ஆயுதமாக்கிக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள். அனுபவம் வாய்ந்த தளபதிகள். ஏறக்குறைய ஒரு நிழல் அரசு என்ற நிலையில் ஆட்சியும் அதற்கான நிலமும் அதிகாரமும். உள்நாட்டிலும் சர்வதேசப் பரப்பிலும் பெருகிய தமிழாதரவுத்தளம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படிப் புலிகள் இல்லாத ஒரு சூழல் வரும்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அவர்கள் இந்த முக்கிய பிரமுகர் சென்னதைக் கேட்டு நகைத்தனர். அப்படிச் சொன்னவரை எண்ணி உள்ளே சிரித்தனர். உலகமே புலிகளைப் பற்றி, அவர்களுடைய வீரதீரச் செயல்களைப்பற்றிச் சரியாக மதிப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது இவர் என்ன புதுக்கணக்குச் சொல்கிறார். புதுசாகக் கதை விடுகிறார்கள் என்று எண்ணினார்கள்.
பதுளையில் நிலநடுக்கம்
பதுளை, பஸ்ஸர, ஹாலி-எல பிரதேசங்களில், பாரிய சப்தத்துடன், இன்று காலை 8.20 மணிக்கு நில அதிர்வொன்று ஏற்பட்டதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார். அதிக சப்தத்துடன், 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக, பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.
மன்னாu; புதைகுழி மர்மமும் புலிகளின் சித்திரைவதை முகாம்களும்
‘வன்னி பல்கலைக்கழகம்’ விரைவில்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு ‘வன்னி பல்கலைக்கழகம்’ என பெயரிடப்படுமெனவும், உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (15) பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.பல்கலையின் வவுனியா வளாகமே, வன்னி பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளது.