மகாத்மா காந்தியின் அன்பு நிறைந்த இந்தியா அல்லது, வெறுப்பு நிறைந்த நாதுராம் கோட்சேவின் இந்தியா இதில் எது வேண்டும் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
Month: March 2019
அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை
வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் நாளை முதல் அதிகளவிலான வெப்பநிலையுடனான வானிலை தொடருமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலைமையின் காரணமாக வரட்சி மற்றும் உடல் சோர்வுகள் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுமெனவும், இதனால் அதிகளவில் நீரை பருகுதல் என்பவற்றில் அதிகளவு அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
வடக்கில் அதிகரிக்கும் கடும் வெப்பம்…பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்…..!! பிள்ளைகள் அவதானம்…!
வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக உடல் நலனில் பாதிப்புக்கள் ஏற்படலாம். வெப்பமான காலநிலை நிலவும்போது, தேவையான ஆயத்தங்களைச் செய்வதுடன் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் ஊடாக பாதிப்புக்களைத் தவிர்க்க முடியும் என்று வடக்கு மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரை
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சீனா – வெனிசுவேலா அண்மைய அரசியல் உறவுநிலை
(ஜனகன் முத்துக்குமார்)
வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பதாக, அந்நாட்டின் தேசிய சபையின் தலைவர் குவான் குவைடோ, இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி அறிவித்திருந்தார். ஐக்கிய அமெரிக்கா, பிரேஸில் உட்பட 50 நாடுகள் குவைடோவை அங்கிகரிப்பதற்கான அறிக்கையை வெளியிட்டிருந்தன. ஆயினும், வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம், தேசிய சபையின் குறித்த நடவடிக்கை அரமைப்பை மீறுகிறது என்பதை உறுதிப்படுத்தியிருந்ததுடன், ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, ஐக்கிய அமெரிக்கா, கொலம்பியாவுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளும் தனது முடிவை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” – சிவோட்டர் கருத்துக்கணிப்பு
2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துகனிப்பை தெரிவித்துள்ளது. 17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.
மிரட்டும் வட இந்தியர் வாக்கு வங்கி…தயங்கும் திமுக விஐபி-க்கள்..!
இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: ஒப்பந்தம் கையெழுத்து
மன்னார் மனித புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா?
கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்
சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கி ன்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சிவரமணி,சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா….. …… என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவை யல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது. இன்று பெண்களை பாதுகாப்போம், பெண்களை மீட்டெடுப்போம், பெண் களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என்று நாம் ஒவ்வொருவரும் கோசங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம்மால் பல பெண் ஆளுமைகளின் இருப்புகளை கடந்த காலங்களில் காப்பாற்ற முடியவில்லை.எமது சமூகத்தை வழிநடத்தும் மிகப்பெரும் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த பெண்களை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.அதன் பிரதிபலனானாகவே எமது பெண்சமூகம் இன்று மீளமுடியாத அகலபாதாலத்துக்கு சென்று கொண் டிருக்கிறது எனலாம்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் மீண்டும் போட்டியிட முடிவு
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை மேற்கு, கிழக்கு, மத்தி, வடக்கு, தெற்கு, மேலூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இதன் மூலம் இத்தொகுதியில் காங்கிஸ் இதுவரை 8 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், ஜனதா கட்சி ஒருமுறையும் வென்றுள்ளன.