வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவ முகாமை அகற்றக் கோரி கவனயீர்ப்பு

மட்டக்களப்பு – முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமை அகற்றி, முகாமினுள் உள்ள பாடசாலைக் கட்டடத்தை விடுவித்துத் தருமாறும் மக்கள் போக்குவரத்துக்குரிய வீதியைத் திறந்து தருமாறு கோரியும், குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக, பிரதேச மக்களால் இன்று (08)காலை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடு

(ஜெரா)

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர். அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார்.

மன்னார் முரண்பாடுகள்: நாம் என்ன செய்ய வேண்டும்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
மன்னார், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பு மற்றும் முரண்பாடுகள், தமிழ்ச் சூழலில் மதவாத, சாதியவாத, பிரதேசவாத, சந்தர்ப்பவாத உரையாடல்களை மீண்டும் தோற்றுவித்து இருக்கின்றன.
தமிழ் மக்களிடம் எப்போதுமே, ‘இருகோடுகள் தத்துவம்’ கோலொச்சி வந்திருக்கின்றது. ஒரு பிரச்சினையை மறைக்க, அதைக் காட்டிலும் உணர்ச்சிகரமான இன்னொரு பிரச்சினையைத் தோற்றுவித்தல், திணித்தல் எனும் நிலை. அது, வெளி எதிரிகளால் மாத்திரமல்ல, உள்ளிருக்கும் எதிரிகளாலும் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.