மீரிகமையில் ஆடை கொள்வனவு செய்துள்ள தீவிரவாதிகள்

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாத குழுவின் உறுப்பினர்களுக்கு மீரிகம- கிரிஉல்லயில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலிருந்து ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள்கள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு பிரிவு குற்ற விசார​ணைப் பிரிவினரும் மீரிகம பொலிஸாரும் இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சாய்ந்தமருது தாக்குதல்; சஹ்ரானின் குடும்பத்தினரே பலி; மனைவியும் குழந்தையும் காயம்?

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் குடும்பத்தினரே உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும் குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும் தெரியவருகிறது. காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாஷிம் மதனியா, சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இது முடிவல்ல’ IS அமைப்பு எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில், உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்று, இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரில் இயங்கும் ​ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய நம்பிக்கை படி

(Dr Parook Abdulla)
இன்று ஹாசிம் சஹ்ரான் எனும் தற்கொலை பயங்கரவாதியின் வீடியோ ஒன்றைப்பார்த்தேன். அவன் சொந்தமாக ஒரு யூட்யூப் சேனல் நடத்தி வந்ததும் அதில் இஸ்லாமிய மார்க்கம் கூறுவதாக பல கட்டுக்கதைகளை பரப்பி வந்ததும் தெரிகிறது

சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேலை செய்ய வேண்டி உள்ளது

(Fauzer Mahroof)
போகிற போக்கை பார்த்தால் , இலங்கை முஸ்லிம்கள் தமது தேசப்பற்றை நிரூபிக்க சிங்கக் கொடியை மேலாடையாக அணிந்து, கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டும் என நெருக்குவது போல் உள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் இதுவரை எதிர்கொள்ளாத மிக ஆபத்தான சூழல் இது. இந்த நிலையை தன்னளவில் நின்று எதிர்கொள்வதற்கான மனப் பலத்தை உடனடியாக கட்டியெழுப்ப சமூக அகத்திற்குள் வேலை செய்ய வேண்டியது உடனடிப் பணிகளில் முதன்மையானது.இதில் சிவில் சமூகத்தின் பணி கணிசமானது.

“வாப்பா”…….

(ப. தெய்வீகன்)

சாய்ந்தமருதில் படையினருக்கும் தீவிரவாதக்குழுவுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் தற்கொலைக்குண்டுதாக்குதல் மேற்கொண்டு இறந்துபோனவனின் மகளை படையினர் பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு வந்து அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். இரத்தக்கறைகளை துடைத்துவிடுகிறார்கள். ஆயுதங்கள் தரித்த சீருடைப்படையினர் அவளை தூக்கிக்கொண்டுவரும்போது அவள் கதறி அழவில்லை. அவளுக்கு தன்னைச்சுற்றி என்ன நடைபெறுகிறது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியிலிருக்கிறாளா அல்லது நேற்றிரவு வரை அப்பாவும் இப்படித்தான் ஆயுதத்துடன் இருந்தாரே, அவருடனும் இவர்களைப்போல இன்னும்பலர் ஆயுதங்களுடன் இருந்தனரே என்று பழக்கப்பட்டுவிட்டாளா தெரியவில்லை. ஆனால், அம்புலன்ஸ் வண்டிக்குள் ஏற்றி, கிடத்தி வைத்து இரத்தக்கறைகளை துடைத்துவிடுகின்றபோதுதான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. கூடவே, அப்போதுதான் அதிச்சியுற்று நினைவு திரும்பியவள்போல சூழ்நிலையை வித்தியாசமாக உணர்வதாகவும் தெரிகிறாள்.

‘ஈராக், சிரியா பாணியில் இலங்கையில் தாக்குதல் திட்டம்’

ஈராக், சிரியா நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று இலங்கையிலும் அதிரடித் தாக்குதல்களை நடத்த. தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் நடத்திய புலனாய்வு விசாரணைகளில். இது தொடர்பான தகவல்கள் வெளிவந்தள்ளதாக. இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரக்கண்டியில் பல ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை – இரக்கண்டி பகுதியில் இன்று (27) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து, மோட்டார் சைக்கிளொன்றும் ஒவ்வொன்றும் 130 கிலோகிராம் எடையுடைய, வெடிகுண்டு குச்சிகள் 51, 27 அடியைக் கொண்ட பாதுகாப்புக் கம்பிகள், 215 டெட்டோனேட்டர்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ​கடற்படையினர் தெரிவித்தனர்.

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள் மீட்பு

அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு

கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரித்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போதே, இந்த வாள்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.