கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர் தங்கும் விடுதிகளை குறிவைத்தும் இஸ்லாம் மதவெறியர்களால் பாரியளவிலான மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்,சிங்களவர், வெளிநாட்டவர் என நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
Month: April 2019
கல்முனை – சவலக்கடை, சம்மாந்துறையில் ஊரடங்கு
கல்முனை – சவலக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களுக்கு, மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில், பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் வீடொன்றை, இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து, அங்கு மூன்று பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
வாரணாசியில் பிரியங்கா இல்லை
’2 வருடங்களுக்கு முன்னரே சஹ்ரானில் மாற்றம் ஏற்பட்டது’
தெமட்டகொடயில் FBI சோதனை
தெமட்டகொட பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ விசாரணைப் பிரிவினர், இன்று (26) மாலை, குறித்த பகுதிக்குச் சென்றனர். குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரையில், அவ்விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அர்ப்பணிப்பும் பிரக்ஞையும் ஜனநாயக மனிதாபிமான சமத்துவ எண்ணமும் கொண்ட தலைமைத்துவத்தின் வரலாற்று அவசியம்
(தோழர் சுகு)
உயிர்த்த ஞாயிறில் மானிடத்தின் மீது வீசப்பட்ட மரண வாடை.
எழிலார்ந்த வாழ்வின் ஜோதியை ஏற்றுவோம்!!!
இந்த பயங்கரவாதிகள் மனித குலத்தின் எழிலார்ந்த அனைத்தையும் வெறுப்பவர்கள்.
வாழ்வின் மீது வன்மமும் குரோதமும் கொண்டவர்கள்.
பண்பாடு நாகரிகம் மனித விழுமியம் அறம் என இருப்பவை அனைத்தையும் அழித்து விட துடிப்பவர்கள்.
இதுவரை கால மனித குலத்தின் உயரிய பெறுமானங்கள் அனைத்தையும் வெறுப்பவர்கள்.
குழந்தைகளின் சிரிப்பு மனித குல பிரவாகமான நம்பிக்கை நாட்களை சிதிலமாக்குபவர்கள்.
சக வாழ்வு மானிடத்தின் நம்பிக்கையான எதிர்காலம் என்பதெல்லாம் இவர்களுக்கு வேண்டாத சொற்கள்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை..??
(Thambirajah Elangovan)
ஆப்கானிஸ்தான்…
ஈராக்…
எகிப்து…
லிபியா…
சிரியா… ..
மற்றும் பல நாடுகளில்
பயங்கரவாதத்தை ஒழிக்க
இறங்கியவர்கள்… ..
இலங்கையிலும்
இறங்குகிறார்கள்
பயங்கரவாதத்தை ஒழிக்க..?
ஐயோ… .. பாவம்.. எங்கள் இலங்கை மாதா..!
கொழும்பு (2)
(ப. தெய்வீகன்)
பெரிய ஞாயிறன்று சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய தற்கொலை அங்கியானது முன்னர் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கியிலும் பார்க்க முற்றிலும் வேறானது என்று சிறிலங்கா பொலீஸ் தரப்பினர் கூறியுள்ளார்கள். விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கியின் எடை இரண்டு – மூன்று கிலோதான் என்றும் பெரிய ஞாயிறு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தற்கொலை அங்கி கிட்டத்தட்ட 25 கிலோ எடையுடையது என்றும் பொலீஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.
கொழும்பு – (1)
(ப. தெய்வீகன்)
கொழும்பு குண்டுவெடிப்புக்களினால் சிறிலங்காவின் ஆட்சி இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் அழுத்தத்தின் அதிர்ச்சிகரமான விளைவுகளில் ஒன்றாக நாளை புதன்கிழமை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படலாம் என்று கொழும்பு வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.