உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்தது

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் வி​ஜேவர்தன தெரிவித்தார். இதன்படி உயிரழந்தவர்களில் வெளிநாட்டவர்கள் 38 பேர் உள்ளடங்குவ​தோடு, காயமடைந்தோர் 500 பேர் வரையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

40 பேர் இதுவரையில் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஒரு தொகை தங்க ந​கைகளை, 300 இலட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 பாகிஸ்தானியர்கள் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடிநியுஸ் வீதி பிரதேசம், பெரியமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்து 6 பாகிஸ்தானியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு- குடியகல்வு சட்டதிட்டங்களை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்தவர்களே நேற்றைய தினம் (22) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் 18, 23, 25, 24 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென்றும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தாக்குதலும் இதன் பின் புலமும்

(Stanley Rajan)

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு ஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்டிருக்கின்றது , அதை உங்கள் பார்வைக்கு தருகின்றோம். இலங்கை பாதுகாப்பு அமைச்சு இது உள்ளூர் தவுபிக் ஜமாத் அமைப்பின் தாக்குதல் ஆனால் வெளிநாட்டு தொடர்பு இருக்கலாம் என சொல்ல, அமைச்சரவையோ முழுக்க முழுக்க உள்நாட்டு சதி என முடித்திருந்தது

பொது மக்கள் மீதான தாக்குதலை முக்காலதிலும் யாரும் ஆதரிக்கவில்லை……வெறுக்கின்றனர்

(சாகரன்)

1983 ஜுலை 24…. தென் இலங்கை எங்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கலவரங்கள் கொலைகள் கொள்ளைகள் சொத்து எரிப்புகள் நடைபெற்றன. இத்தாக்குதலை செய்தவர்கள் சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிகு வந்த இலங்கை பௌத சிங்கள கட்சியும் அதன் அரசும். இத் தாக்குதலின் பின்பு இத்தாக்குதல் சிங்களவர் முழுவதுமாக தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக முழுத் தமிழ் மக்களாலும் உணரப்படவில்லை. இத்தாக்குதலை மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வெறுத்தனர்….. ஆதரிக்கவில்லை.

மாமேதை விளாதிமிர் லெனின் பிறந்த தினம் – ஏப்ரல் 22

ரஷ்யப் புரட்சியாளரும், அறிவியல் எழுத்தாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் இவரே.

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு; 24 பேர் கைது- பின்னணி குறித்து புதிய தகவல்கள்

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 சந்தேகநபர்கள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர், தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலை தொடர வேண்டுமா?

(Janaki Karthigesan Balakrishnan)
இலங்கையில் இனத்தால், மொழியால் மனிதர் பலியாகி, மதங்களால் மனிதர் பலியாகும் படலம் ஆரம்பித்துள்ளது. அவற்றை செய்திகளாகவும், வதந்திகளாகவும், ஊகங்களாகவும் பரப்பி, பின் அவற்றின் தாக்கங்களை கவிதைகளில் வடித்தெடுத்தும், இலக்கியங்களில் படைத்தும், வரலாற்றுக் காவியங்களுமாக்கிச் செல்கின்றோமே தவிர, இவற்றை எப்படித் தவிர்ப்பது, அறவே ஒழிப்பது என்பதற்கான செயற்பாடுகள் ஏதுமின்றி, தொடர்ந்தும் அல்லலுறுகின்றோம், தவிக்கின்றோம்.

இலங்கையில் அமைதி நிசப்த்தம் நிலவுகின்றது

இலங்கையில் நடைபெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைதுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதுவரை இச்சம்பவம் யாரால் நடாதப்பட்டது என்ற உத்தியோக பூர்வ அறிவிப்பு வரவில்லை. நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு அமைதியான சூழலில் உள்ளது. அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயற்படுவதாக அறிய முடிகின்றது. வெளிநாடுகள் தமது ஆதரவை இலங்கை அரசிற்கு தெரிவித்தும் வருகின்றனர். ஊடகங்கள் நிதானமாக தமது செய்திகளை இதுவரை சமூகப் பொறுப்புடன் வெளியிட்டு வருகின்னர். இன மத சமூக வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவியாக அனுசரணையாக இலங்கை மக்கள் இருக்கின்றனர். வாழ்க சகோதரத்துவம்