பேரிகை ஆற்றின் கதறல்.
கதிரவெளி ஒரு குருசேத்திரமாக
மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்
கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்
வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு
வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு
அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து
இரண்டாவது பெரியவெள்ளியை
எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.
வடக்கு வாரியடித்த புழுதியில்
வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல
கிழக்கு மண்ணும் சிவந்தது.
வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்
வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே
அதை நாம் அறிவோம் என்றும்
காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்
கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்
காடுகளுக்கு சொல்லிப்பறந்தது
கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.
Month: April 2019
ஈழத்தமிழர்களால் பாதிக்கப்படும் பிரெஞ்சு விவசாயிகள்..!
நினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும்
(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
துரியோதன சகோதரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பகிரங்கமான கூட்டத்தின் நடுவே திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவளை அவமானம் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து மகாபாரதப் போர் வருகிறது. இராவணன் சீதையைக் கடத்திச் சிறைவைத்ததால் இராமாயண யுத்தம் வருகிறது. இவை இதிகாசங்கள்.ஆண்களால் எழுதப் பட்டவை.ஆனாலும் பெண்களைப் பாலியற் கொடுமைகளுக்கு ஆளாக்கினால் அதன் விளைவாக அழிவுகள்,மாற்றங்கள், புதிய சிந்தனைகள் என்பன பிறக்கின்றன என்பது மேற்குறிப்பிட்ட கதைகளிலிருந்து தெரிய வருகின்றன.
சமூக விடுதலைப் போராளி “கண்டகா”
இவர் பெயர் அலா சலா. 22 வயதேயான இளம் பெண். ஒரு “முஸ்லிம் நாடான” சூடானில் மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் சமூக விடுதலைப் போராளி. அங்குள்ள மக்கள் இவரை “கண்டகா” என்று அழைக்கிறார்கள். அது பண்டைய நாகரிக காலத்தை சேர்ந்த நுபிய ராஜ்யத்தில் அரசியின் பெயர்.
விக்கிலீக்ஸ் (WikiLeaks) ஸ்தாபகர் ஜுலியன் அசான்ஞ் (Julian Assange) கைது செய்யபப்ட்டார்.
வெருகல் படுகொலை – 15 ஆவது ஆண்டு நினைவு பேருரை – சந்திரகாந்தன்
மக்களோடு மக்களாய்…
நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் க.சற்குணநாதன்(பேராசிரியர் சிவச்சந்திரனின் மைத்துனர்) அவர்கள் எழுதிய “ஆழ்கடலும் அழகிய முகங்களும்” என்ற புத்தக வெளியீடு 07.04.2019அன்று நடைபெற்றது. இவ் புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் அவர்களும், ஆய்வுரையை சர்வேஸ்வரன்( சுகி)அவர்களும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் வழங்கினார்கள் .
இறுதியாக இந் நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் வரதராஜப்பெருமாள் அவர்கள் புத்தகங்களை வழங்கினார்.
மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்
தோழர் ஐயா அவர்களின் 31வது ஆண்டு நினைவுநாள்……..
06.04.1988 அன்று தோழர் ஐயா அவர்களுடன் தோழர்கள் சாரங்கன், தங்கேஸ், ரவி, சில்வா, பவா ஆகியோர் நிராயுதபாணிகளாக வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வவுனியாவில் வைத்து சகோதர அமைப்பான PLOTE அமைப்பின் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்து தெருவேரத்தில் வீசி எறியப்பட்டார்கள்.