ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம்….
40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய்.
அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம்.
ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம் 40 மெசினுக்கு 16 லட்சம்.
Month: May 2019
இலங்கையில்காட்சிகள்வேகமாகமாறுகின்றன
பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்
(ஏகலைவா)
அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
ஒரே நாளில் பல தாக்குதல்கள் திட்டம்; வெற்றியளிக்காமைக்கான காரணம் வெளியானது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான்….?
(Annam Sinthu Jeevamuraly)
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான் என்ற அறிவுறுத்தல் தோறணையில், முகநூலில் விவாதங்கள் கிளப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே யாழில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் சும்மா கடந்து செல்லுமாறு , தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னான விவாதங்கள் வலியுறுருத்துக்கின்றன.
34 வது நினைவாஞ்சலி
03.05.1985ம் ஆண்டு EPRLF இன் இரானுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படை(PLA) யினால் மேற்கொள்ளப்பட்ட காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியடைந்த
தோழர் சின்னவன்(கந்தளாய்), தோழர் கணேஷ் (காரைதீவு), தோழர் வேலு (கல்லாறு), தோழர் ஷோபா (யாழ்ப்பாணம்),தோழர் ரஞ்சன் ((யாழ்ப்பாணம்),தோழர் அரவிந்தன் (காரைநகர்) ஆகியோருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலில் பங்கெடுத்து களப்பலியான தோழர் ஷோபா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப்போராடி மரணித்த முதற் பெண் போராளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது – மோடி
(Stanley Rajan)
காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது என்ற அளவில் மோடி அழுவது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் இம்சை இந்திரா ஒரு காலத்தில் அப்படி அழுதார் என்றால் காரணம் இருந்தது, பெரும் சவாலாக அவர் உலக நாடுகளுக்கு திகழ்ந்தார். ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே, நிக்சன் என உலக பிரபலங்கள் எல்லாம் அவர் சாகவேண்டும் என விரும்பின அல்லது துடித்தன
இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்
னம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் அவர்களுக்கு!
“இறுதிப்போரும் நானும்”
(Suren Karththikesu)
இந்நாட்களில் முள்ளிவாய்க்கால்
ஐ.நா வரப்போகிறதாம் என்றும் கதைக்கிறார்கள். செஞ்சிலுவைச்சங்க கப்பல், நிவாரண கப்பல் என இரண்டும் முள்ளிவாய்க்கால் கடற்பகுதிற்கு வந்து போனதால் மக்களும் ஐ.நா காப்பாற்ற வரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மறுபக்கம், இயக்கம் ஒருபக்கத்தால உள்ள இறங்கி அடிக்கப்போகுதாம். இப்படி கதைக்கிறார்கள். கொல்லப்படும் மக்கள் அதிகரித்துக்கொண்டே சென்றது. பலர் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று விட்டார்கள். விலையுயர்ந்த பொருட்களுக்கு பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. தங்கத்தினை விட ஒரு கிலோ அரிசியின் விலை அதிகம். ஒரு கிலோ செத்தல் மிளகாய் ஒன்பதாயிரம் ரூபாயினை தாண்டிச்சென்றது. சீனி ஐயாயிரம். நான்கு தேங்காயை கொடுத்தால் ஒரு ஆட்டோ வேண்டமுடியும். ஒரு உழவு இயந்திரத்தின் விலையும் அப்படித்தான். சில்லறை காசுகள் பாவனையில் இல்லாமல் போய்விட்டது. வெற்றிலைக்கு பதிலாக நாயுண்ணி இலைகள், பாக்குக்கு பதிலாக நாவல் மரத்து பட்டைகள், பசிக்கொடுமையில் அடம்பன் கொடியினையும் விடவில்லை. பனை வடலியின் குருத்தும் எங்களுக்கு பசியினை போக்கியது. இன்னும் எத்தனை நாட்கள் சண்டை தொடரப்போகின்றது என்றும் தெரியவில்லை. நானும் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்தேன்.