உங்கள் எதிரிகள் இவர்கள்

பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்புக்கு முன்னூறுக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்இதற்கு Isis அமைப்பு உரிமை கோரியுள்ளது.இந்தப் பயங்கரவாதிகள் அமைதியான நமது நாட்டைக் குறி வைத்து தாக்கியது யாரும் எதிர்பார்க்காத விசயம்.

வழிபாட்டு இட வன்முறைகள்

இவை ஒன்றும் நமது நாட்டுக்கு புதிது அல்ல.இன்று கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் நடந்த வன்முறைகளை பலரும் கண்டித்து கவலையோடு பேசுகிறார்கள்.இதைச் செய்தவர்களை பயங்கரவாதிகள் என உலகமே சொல்லும்போது இதில் கொஞ்சமேனும் சம்பந்தப்படாத அப்பாவி இஸ்லாமிய மக்கள்மீது பழிகளை போடுவதில் அர்த்தம் இல்லை.

சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.

தெற்கிலிருந்து வடக்குக்கு வெடிப்பொருள்களுடன் 20 வாகனங்கள்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானின் சகோதரன் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு; மாமாவும், மாமியும் கைது

தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் ச​கோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளன.

பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்

அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

ஐஎஸ் ஐஎஸ் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட புலஸ்தினி மகேந்திரன்

(வரதன் கிருஸ்ணா)
ஐஎஸ் ஐஎஸ் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு என தெரியவந்துள்ளது பொதுத் தராதர பரீட்சையில் 8 ஏ பெற்ற ஒருவராம் ஐபிசி இந்த விடயங்களை தேடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது மற்றது அந்த பெண்ணை கல்யாணம் முடித்த ராசிக் என்ற நபர் இலங்கை புலனாய்வுத்துறையின் ஒரு ஒற்றராம் ” அதைவிட அந்த அல் ஜமேதாவின் செயலாளராம் அந்த பெண்ணை மதம்மாற்றி திருமணம் செய்து தற்கொலை குண்டுதாரியாக மாற்றி இருக்கிறார்கள் அந்த கூட்டத்தில் இருந்து சத்தியம் செய்த ஒரே தமிழ்ப்பெண் ” இவள்தான் , என்ன செய்வது மூளை சலவை, தமிழர்களாகிய நாம் வெட்கி தலைகுனிய வேண்டும் .