( யஹியா வாஸித் )
1983 க்கு முதல் எங்கள் கதையே வேற டைப், ஒரு குட்டி கட அல்லது மூன்டேக்கர் வயல்காணி,
நாலு மாடு, பத்து ஆடு,ஒரு மீன்பிடி வல, ஒரு தோணி, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு
பதினாலடி பைபர் கிளாஸ் போட்டு. கொஞ்சம் டீச்சர்ஸ். இது கிழக்கில்.
The Formula
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்கள் எப்போதும் சுவை நிறைந்தவை. அவற்றின் முடிவுகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஆச்சரியத்தையும் விட அதைச் சுற்றி நடக்கும் விடயங்களே கவனத்தை வேண்டுவன. ஆனால் தேர்தல்கள் என்பவை வெற்றி தோல்விகளுடன் முடிந்து போகின்றன. ஆனால் அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், கதையாடல்களும் உருவாகும் உரையாடற் கோலங்களுமோ அச்சமூகங்களை ஆள்கின்றன. ஆனால் இவை கவனம் பெறுவதில்லை. மாறாக இவை அவற்றுக்கேயுரிய நுண்ணரசியலைத் திறம்படச் செய்கின்றன. சமூகத்தில் ஆழமாக ஊடுருவி அவை ஏற்படுத்தும் கருத்துருவாக்கங்கள் என்றென்றைக்குமானவை. இவை பேசப்படுவதில்லை. இவை பேசப்படாமல் போவதற்கான முக்கிய காரணம் தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் குறிகாட்டியாக மட்டுமே நோக்கப்படுகின்றன. இதன் ஆபத்துக்களின் ஆழம் எமக்குப் புரிவதில்லை.
பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவதூறு வழக்கில் குற்றவாளியான அவர் 9 மாதங்களும் 3 வாரங்களும் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தமை குறிப்பிடதக்கதாகும் அத்தோடு ஞானசார தேரரின் தயாரும் சிறைச்சாலை வாசளில் அவருக்காக காத்திருந்தார்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக் கூறப்படும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகிகோரை உடனடியாக பதவி விலக்குமாறு கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிக்குகள் இணைந்து கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றை நேற்று (22) கையளித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் திமுக முன்னிலை வகிக்கின்றது. அதிமுகவிற்கு பாரிய பின்னடைவு. கூடவே பாஜக விற்கும் பாரிய பின்னடைவு. மத்தியில் பாஜக தனது இடத்தை தக்கவைக்கின்றது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு முன்னேற முடியவில்லை. மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் வாய்பையும் காங்கிரஸ் பெறுவது கஷ்டம். மாநிலங்கள் அவையில் திமுக ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு வீச்சாக வெற்றி பெறுவதாக அறிய முடியவில்லை. இன்னமும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் ஆரம்ப நிலை முடிவுகள் இவை
மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியபோதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, மினுவாங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய வேண்டாமென, நகர சபையினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிகள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இதனால், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
(யஹியா வாஸித்)
நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப்
பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.
ஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம். ஆம்,ஏப்ரல் 2 1 – 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம்.
எங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம்.