சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.
Month: May 2019
’கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை’
’சந்தேகநபரை விடுவிக்குமாறு, ரிஷாட் என்னிடம் 3 முறை கோரினார்’
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை
’இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் தேவையில்லை’
இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் வைத்து, இன்று (17) அறிவித்தார். மத்ரஸாக்கள் உள்ளிட்ட இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலம் தொடர்பில், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்…
மனிதத்தை தொலைத்து விட்டு நாம் எங்கே செல்கிறோம்…….!!
செவ்விந்தியக் காந்தி.
’23ஆம் திகதி வருக’ எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் சோனியா
டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இம்மாதம் 23ஆம் திகதி சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்துக்க, மொத்தமுள்ள 543 இடங்களில், வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு, எதிர்வரும் 19ஆம் திகதியுடன், தேர்தல் நிறைவடையவுள்ள நிலையில், 23ஆம் திகதி, 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
சகல அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக்குழுவை அமைக்க யோசனை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், அதற்கு பின்னர் எமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்ட தளர்வே காரணம் எனக் குறிப்பிட்ட திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன, பாதுகாப்பில் எவ்வாறு தளர்வு ஏற்பட்டது. ஏன் நடந்தது? இதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூறலிலிருந்து ஏன் விலகியுள்ளனர். என்பவை தொடர்பில் ஆராய சகல அதிகாரங்களுமுடைய தெரிவுக் குழுவொன்றை அமைக்க சபாநாயகர் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.