Month: June 2019
கனடாவில் தியாகிகள் தினம்
தாயகத்திலும் உலகம் எங்கும் நினைவு கூரப்படும் தியாகிகள் தினம் இவ்வருடம் கனடாவின் பல்வேறு அரசியல் கருத்துடையோரின் சந்திப்பொன்றின் மூலம் நடாத்தப்பட்டது. மனித குல விடிவிற்காக தம்மை அர்பணித்த அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கும் ஒரு நிமிட அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது. சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களின் நினைவுகளை முன்தாங்கியதாக ஆரம்பமான சந்திப்பு கலந்துரையாடல் தற்போதைய இலங்கை அரசியல் சூழலை ஆராய்வது வரை விரிந்து சென்றது. பத்மநாபா போன்ற மகத்தான தலைவர்களின் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவ செயற்பாடுகள், போராடும் சிறுபான்மை மக்களுக்கிடையேயான உறவுகள், மாற்றுக் கருத்தாளர்களிடையேயான ஐக்கிய முன்னணி செயற்பாடுகள் என்பன எந்தளவிற்கு அவர் மறைவின் பின்பு முன்னேற்றம் அடைந்தன என்ற கருத்துக்கள் கேள்வியாக இங்கு எழுப்பப்பட்டது இச் சந்திப்பு கலந்துரையாடலின் சிறப்பாக அமைந்தது. இரு மணிநேரம் வரை நீடித்த இந்த கலந்துரையாடல் தோழர் நாபாவின் சிந்தனைகளை வலுப்படுத்தி மேலும் அவர் பாதையில் நாம் முன்னேற வேண்டிய அவசியத்தை வலியறுத்தி நிறைவு பெற்றது.
ஈழ யுத்ததின் பின் பெண்கள் விவகாரம் உரிமைகள் சலுகைகள,வாழ்வாதாரம் வலுவிழந்து பற்றி ஆராய்வு!!
(வேந்தன்)
சமூகம் சார்ந்தும் பெண் சார்ந்தும் செயலாற்றிவருகின்ற
செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் பெண்ணியவாதிகள் ஆர்வலர்களையெல்லாம் நேரடியாகச்சந்திக்கவும் உரையாடவும் அவர்களுடன் ஒட்டியுறவாடவும் முதன் முறையாக மும்பையில் களமமைத்துத்தந்த ஊடறு ,
இரண்டாவது தடவையாக மட்டக்களப்பில் எம்மையெல்லாம் ஒன்றுசேர்த்துக்கொண்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மீது செருப்பு வீச்சாம்…
29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில்
29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில் தோழர் சிறாப்பின் தலைமையில் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திருமதி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் PLOTE, TELO, EPRLF, EPDP ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். தியாகிகள் தினம்- நாம் கடந்து வந்த பாதையும் சந்தித்த முகங்களும் எனும் தொனிப்பொருளில் புகைப்பட கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.
ஜனநாயக சோஷலிசம் என்பது இது தான்:
(Kalai Marx)
உலகம் முழுவதிலும், பொலிவியாவில் மட்டுமே நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுகின்றனர். நாடு முழுவதும் நடக்கும் பொதுத் தேர்தலில் மொத்தம் 52 நீதிபதிகளை மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்ய வேண்டும். லத்தீன் அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக, 2011 ம் ஆண்டு நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 125 வேட்பாளர்கள் அதில் போட்டியிட்டனர். அவர்களில் அரைவாசிப் பேர் பெண்கள்.
பிரான்ஸ் இல் தியாகிகள் தினம்
கனேடிய பாராளுமன்றம் இலங்கை மீது ஐ.நா விசாரணை கோரியது….!!
கனேடிய பாராளுமன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்….!!
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனேடிய நாடாளுமன்றம் கேட்டுக்கொள்கிறது என்ற
பிரேரணை கனேடிய நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வாழ்க்கை
(வேதநாயகம் தபேந்திரன்)
அவருக்கு வயது 86.ஓய்வு பெற்ற உபாத்தியாயர் ( ஆசிரியர் ). அதிகாலை
வேளையில் கையில் மண்வெட்டியுடன் தோட்டத்திற்குப் புறப்பட்டார்.
பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மறித்தனர். இவ்வாறு மறிப்பது அவர்களது நாளாந்தக் கடமை.
” ஐயா, நல்ல வசதியாக இருக்கிறம். ஏன் தோட்டம் செய்து கஸ்ரப்பட வேண்டும்.
வீட்டில ஓய்வா இருங்கோ ”
அன்ரன் பாலசிங்கத்தின் உண்மை முகத்தை அறியாமல் ….
அன்ரன் பாலசிங்கத்தின் உண்மை முகத்தை அறியாமல் அவரை அறம்மிக்க புத்திசீவி என்று தப்பாக கணிப்பவர் ஒரு வகை. மறுவகை பாலசிங்கத்தின் உண்மை முகமறிந்தும் அவரை வேண்டுமென்றே தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக நல்லவராக காட்டுபவர்கள். கருணாகரன் இந்த இரண்டாம் ரகம். அண்மையில் அவர் எதிரொலியில் எழுதிய கட்டுரையில் பாலசிங்கத்துக்கு புனர்வாழ்வளிக்க பகீரதப்பிரயத்தனம் செய்துள்ளார்.