தனிநாடு கோரி போரிட்ட ஒரு இனம் இன்று ஒரு நகரத்தின் அலகுகளை தரமுயர்த்தப்படல் வேண்டும் என்ற நிலைக்கு சென்று இருக்கின்றது, ஒரு காலத்தில் மாவட்டசபைகள் மட்டுமே அதிகாரமாக தர முடியும் என அப்போது தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த ஜேஆர் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு மாகாணமாக வழங்க முன்வந்தார் அதைவிட அந்த மாகாணத்தை நிர்வகிக்க இந்தியா முதல் கட்டமாக நூறு கோடிகளை வழங்க முன்வந்தது அதைவிட தமிழரின் பாதுகாப்புக்கு தமிழ்த்தேசிய இராணுவம் என்ற ஒன்றை அமைத்தது இந்த இரண்டு விடயங்களையும் முற்றாக புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதன் காரணமாக ஈபிஆர் எல் எப் வடக்கு கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டி ஏற்பட்டது, இதே காலத்தில் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் யுத்தம் ஆரம்பித்தது, இந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவுடன் புலிகளுக்கு ஏற்பட்ட நட்பும் அதைவிட இந்தியாவை எதிர்த்த பிரேமதாசாவின் கொள்கை பற்றுறுதியாகி பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வாரி வழங்கினார், புலிகளின் எதிர்ப்பும் அதைவிட இலங்கை அரசின் எதிர்ப்பும் இந்தியாவை முகம்சுழிக்க வைத்தது அதைவிட இந்திய இராணுவத்தின் இழப்பு இந்திய இராணுவம் வெளியேறியது அதே காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதர் அவர்கள் மாகாணசபையில் தமிழீழ பிரகடனம் செய்துவிட்டு வெளியேறினார், இது முடிந்த கதை, கிடைத்த வாய்ப்புகளை தட்டிக்கழித்துவிட்ட தமிழினம் இன்று முதலில் இருந்து ஆரம்பிக்கின்றது, வரலாறுகள் இப்படித்தான் மாறி மாறி வந்துபோகும் .
(Varathan Krishna)