சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 9 பேரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பான இராஜினாமா கடிதங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
Month: June 2019
அரசியல் தீர்வுகள் கிழித்தெறிதல்களும்…. கொழுத்துதல்களும் ஒப்பந்தங்கள் கைவிடப்படுதலும்… இராஜினமாக்களும்……
(சாகரன்)
இலங்கை அரசியல் வரலாற்றில் கிழித்தெறிதல், கைவிடுதல் இராஜினமாக்கள் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இவைகள் நடைபெற்றதற்கு பின்னால் பேரினவாதம் மட்டும் அல்ல குறும் தேசியவாதமும் ஏகபோகவாதங்களும் இருந்திருக்கின்றன. பண்டா – செல்வா ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகளின் இராஜினமா எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பவை பேரினவாதத்தின் அழுத்தங்களே. சிங்களப் பேரினவாதம் அது பௌத்த துறவிகளின் வடிவில் முன்னிறுத்தப்பட்டாலும் இங்கு பௌத்த சிங்கள பேரினவாதமே கைகோர்த்து செயற்பட்டிருக்கின்றது. அரச தலமையில் இருப்பவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் இராஜினமாக்களுக்குள் இந்த பேரினவாதம் தனது கோர முகத்தை காட்டி இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் பொறி முறையை தவிர்க்கும் ஒரு சூழலையே ஏற்படுத்தியே இருக்கின்றது.
உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் தேரர்
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, இன்றுடன் நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை, தேரர் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்தே, அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இராஜினாமா
சகல முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் என அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார். ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
‘முகத்தை முழுமையாக மூடி பாடசாலைக்கு வருவதற்குத் தடை’
எனது மகனின் படுகொலைக்கு ஶ்ரீலங்காவில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை
எனது மகனின் படுகொலைக்கு ஶ்ரீலங்காவில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார்
அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார்.
ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது.
திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள்
அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது.
நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தன.
நான் பிரதே அறையின் உடலை திறந்தேன் .முதலில் இருந்தது எனது மகனின் உடல்.
ஶ்ரீலங்காவில் உரிய நீதி கிடைக்காது.நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன் , நான் ஒருபோதும் ஶ்ரீலங்கா சேர்ந்த சில நீதிபதிகளை நம்புவதில்லை.
நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன்.
நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை.