‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதுரம்

(மொஹமட் பாதுஷா)
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது.

கர்நாடகாவின் பின்னணியில் ஒலிக்கும் குரல்

(எம். காசிநாதன்)
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, கொண்டு வரப்பட்ட கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், மீண்டும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அரசாங்கம், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று, புதிதாக பா.ஜ.க அரசாங்கம் அமையவிருக்கின்ற நிலையில், இந்த விமர்சனம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவியேற்பு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜுன் மாதம் 3ஆம் திகதி அமைச்சரவை, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தனர். அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகிய இருவரும் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், எஞ்சியிருந்த 7 பேர் தமது பதவிகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுள்ளனர்.

பிக் பாஸ் (Big Boss)

தமிழ் தொலைக் காட்சி ஊடகங்களில் உண்மை நிகழ்ச்சி(Reality Show) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு காலத்தில் சிறப்பானதாகவும் பல பயனுள்ள தகவல்களை கொண்டதாகவும் அதே வேளை மகிழ்சியை ஏற்படுத்துபவனவாயும் அமைந்திருந்தன என்னவோ உண்மைதான். இவற்றின் மூலம் பல திறமைகள் முன் கொணரப்பட்டு இந்த திறமைகள் பொதுவெளியில் பயனுள்ளதாக மாறியதும் உண்மைதான். இதற்கு பல நிகழ்ச்சிகளை சொன்னாவும் பலராலும் நன்கு அறியப்பட்ட ‘சுப்பர் சிங்கரை(Supper Singer)” உதாரணத்திற்கு சொல்லலாம்.

எல்லாவற்றையும் இழந்துதான் போவோமா

(Balasingam Sugumar)
மூதூர் தமிழ் பிரதேச சபை

மூதூர் ஈழத் தமிழர்களின் தொல் நிலம் பல்லாயிரம் வருடங்களாய் தமிழர்களது வாழ்வுக்கான ஆதாரங்களின் கரூவூலமாய் பண்டைப் பண்பாடும் வரலாறும் நெடிய நீண்ட ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கும் பூமி.

14 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம்

கர்நாடகா மாநில சட்டசபையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 11 சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அச்சபையின் சபாநாயகர் கே.ஆர் ரமேஷால் இன்று (28) தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கான மாகாணசபை

(Charles Ariyakumar Jaseeharan)
வடக்கு, கிழக்கு மக்களுக்கான

மாகாணசபை முறைமையை
ஒழித்துவிட்டது கூட்டமைப்பு!!

  • இதற்குச் சுமந்திரனே பொறுப்பு என்கிறார் மஹிந்த

“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாதொழித்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது கிழக்கு மாகாண சபையும் இல்லை. வடக்கு மாகாண சபையும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அநியாயத்தை செய்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்ததென்பதனை இவர்களால் கூற முடியுமா?”

யார் இந்த பறையர்கள்? ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

பறையர்
இலங்கையின் மலையகத்தை பொறுத்தமட்டில் அதிகபடியான மக்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்த “ஆதிப்பறையர்கள்”
ஆரம்ப காலங்களில் “பறையர்” என்றால் தமிழ் இனத்தின் மூத்த குடிகள் என அர்த்தம் இருந்தது பிற்காலத்தில் அது திட்டமிட்டே இல்லாமல் ஆக்கப்பட்டு “பறையர்” என்றால் வெறுமனே பறை அடிப்பவர் என்ற அர்த்தத்தோடு மட்டுப் படுத்திவிட்டனர்.
அதிலும் பறை அடிப்பது என்பதை ஒரு சாதிய அடையாளமாக்கி அதை கீழ்மைப் படுத்தி ஆதிகால பறையர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களை திட்டமிட்டே கீழ்நிலை தொழில்கள் என தரம் பிரித்த தொழிலை செய்ய வைத்து அது அவர்களுக்கான குலத் தொழில் என ஆக்கிவிட்டனர்.

போராட்டம் தொடர வேண்டும்

தமிழ்மக்களின் நிலங்கள் சமயதலங்கள் அபகரிக்கபட்டுள்ளன, என்று நில மீட்பு, சமயதலங்கள், மீட்பு என அண்மையில் போராட ஆரம்பித்த சிவில் அமைப்புகளும், சமயபீடங்களும் , சமரசம்பேச புறப்பட்டுள்ளன, போராட நினைத்தால் சமரசம் தேவையில்லை, திருகோணமலையில் இனங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது ,எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள், சமய தலைவர்களுக்கு‌ம் மதிப்பும், மரியாதையும்உண்டு , தமிழ்மக்களுக்கு பிரச்சினை அரசு நிறுவனமான தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், வனஇலக்கா இப்படியான அரச நிறுவனங்கள், தமிழ்மக்களின் நிலங்கள் சமயதலங்கள் என்பவற்றை ஆக்கிரமிப்புசெய்துள்ளனர்,இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் அல்லது வேறு போராட்டம் மூலம் தமிழ் மக்களின் பூர்வீகநிலங்களையும், சமயதலங்களையும், மீட்கும்வரை போராட்டம் தொடர வேண்டும், இதற்காக போராடுவதற்கு எல்லா தமிழ்மக்களுக்கும், சிவில்அமைப்புகளுக்கு‌ம் மக்கள்பிரதிநிதிகளுக்கு‌ம், உரிமைஉண்டு என்பதை வலியுறுத்துகிறேன்.

(Sathiyan)