
1983 யூலை கலவரத்தின்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் இனவெறியர்களினால் படுகொலை செய்ப்பட்டனர். யூலை 25ம் திகதி 35 கைதிகளும்,யூலை 27ம் திகதி 18 கைதிகளும் பலியாகினர். EPRLF இன் மத்திய குழு உறுப்பினரான தோழர் பாஸ்கரன் ,தோழர் தேவகுமார் ஆகிய இருவரும் 27.07.1983 அன்று படுகொலை செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் மட்டு-அம்பாறை பிராந்தியத்திலுள்ள நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.படுகொலை செய்யப்பட்ட ஏனையோரின் விபரங்களும் பதிவிடப்பட்டுள்ளன.