குடிக்கிற தண்ணிக்காக ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி பழி சொல்லி காரணம் சொல்லிட்டிருக்க –

நம்ப வேலூர் பொம்பளைக மட்டும் – 
15 வருசத்துக்குமுந்தி காஞ்சுபோன ஒரு ஆத்தையே தூர் வாரி சாதனை பண்ணிருக்காங்க.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக 
வேலை வாய்ப்புத் திட்டம் !

பிரித்தானியாவின் புதிய பிரதமர்-திரு பொரிஸ் ஜோன்ஸன்


(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

இன்று மதியம் கொன்சர்வேட்டிவ் கட்சி; தலைவராகவும் பிரித்தானியாவின புதிய பிரதமராகவும் திரு. பொரிஸ் ஜோன்ஸன் என்பவரைத் தெரிவுசெய்திருக்கிறது.இவரின் தெரிவு அவர்களின் கடசியினர் மட்டுமல்லாது பிரித்தானிய பொது மக்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகும்.

1983 யூலை 23 …..?

(வேதநாயகம் தபேந்திரன்)

1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது.
அது தவறு.
யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தாள் நடந்தது.

ஸ்ரீ வித்யா… அதிசய ராகம்! – இன்று ஸ்ரீவித்யா பிறந்தநாள்

(வி.ராம்ஜி)
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம். ஆனால் இதில் உள்ள இயக்குநர்களையோ தயாரிப்பாளர்களையோ, இசையமைப்பாளர்களையோ ஒளிப்பதிவாளர்களையோ, நடிகர்களையோ நடிகைகளையோ… ஓர் கலைஞராக, திறமைசாலியாக மட்டுமே நாம் பார்ப்பதில்லை. மனசுக்குள் இடமிட்டு, ஓர் சிம்மாசனத்தையும் போட்டு, அமரவைத்து அழகுபார்க்கிறோம். அவர்கள் அமரர்களாகிவிட்ட போதும், அந்த இடம் அவர்களுக்குத்தான்! அப்படியொரு இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர்… ஸ்ரீவித்யா.
மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்ரீவித்யா. இவரின் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி என்கிற எம்.எல்.வி. கர்நாடக சங்கீத உலகின் தனிப்பெருங்குயில். அப்பேர்ப்பட்ட பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து திரையுலகுக்கு வந்தார் ஸ்ரீவித்யா.

கர்நாடக அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

சமரசம் குறித்த ட்ரம்ப்பின் பேச்சை மறுத்தது இந்தியா

காஷ்மிர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமக்கு வேண்டுகோள் விடுத்தததாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அந்தக் கருத்துக்கு, இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் தலமைத்துவத்துக்கான போட்டியில் இன்று (23) வென்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தமில்லாமலோ பிரித்தானியாவை இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி விலத்துவதாக உறுதியளித்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவான பொரிஸ் ஜோன்சன், பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேயை பிரதமராக பிரதியிடவுள்ளார்.

’பிரச்சினைகள் தீர்க்கப்படுவது அவசியம்’

திருகோணமலை முதல் நுவரெலியா கந்தப்பளை வரையான நாட்டின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் சார்ந்து அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பிரச்சினைகள் காரணமாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவு

மெகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.

சரவணபவன் அண்ணாச்சியின் எழுச்சியும்… வீழ்ச்சியும்…

தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி கிராமத்தில் மிக மிக ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தார் ராஜகோபால். வறுமை காரணமாக 7 ஆம் வகுப்பிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினார். அப்போதெல்லாம் இரவில் கட்டாந்தரையில் படுத்துறங்கியவர் தான். அங்கிருக்கும் போது தான் தேநீர் போடக் கற்றுக் கொண்டதாக ராஜகோபால் கூறியதுண்டு.