இலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
Month: July 2019
‘நாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லை’
நாட்டில் 17 மாவட்டங்களில் வரட்சி
நிலவிவரும் கடுமையான வெப்பநிலையின் காரணமாக, கடும் வரட்சியால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரட்சி ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதன் செயலகங்களுக்கு கீழ், மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக, குறித்த மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன் பதுளை, மாத்தளை, நுவரெலியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தொடரும் வரட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 5
(யஹியா வாஸித்)
கள்ளத் தோணிகளில் வந்த சோனவனும் , நல்ல தோணிகளில் வந்த மகாத்மாக்களும்.மதம்,மதம், அது , உன்மதமா, என்மதமா,சம்மதமா எண்டு யாருக்குமே புரியல, அதப்பத்தி புரிஞ்சவங்களும் புரியாத எங்களுக்கு புரிய வைக்க முயலல. எல்லாரும் நாங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் எண்டுதான் அடிச்சி சொல்றாங்க.
கீரிமலை சொகுசு மாளிகை: இழப்பீடு வழங்க தீர்மானம்
யாழ். கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உரிமைகோரப்படும் பட்சத்தில் இழப்பீடு அல்லது காணிகை வழங்கவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
‘பலாலி விமான நிலையம் சிறந்த உறவுப்பாலமாக அமையும்’
3 வாரங்களில் 9,410 பேர் கைது
பலாலி விமான நிலையம் மீள கையளிப்பு
யுத்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பொறுப்பேற்றிருந்த பலாலி விமான நிலையம், இன்று (05) மீண்டும் சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால் உருவானவை ஆகும்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை காணிகள் விடுவிப்பு
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார்க் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்பகட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன், நேற்று (04) ஆரம்பமாகின.