தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை ஒன்றை நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Month: August 2019
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக விசைப்படகை கைப்பற்றி அதிலிருந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கிசிங்கர் என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைப்பற்றி அதிலிருந்து கிசிங்கர், மரிய கிதியோன், சிம்சோன், மரிய மில்லர், இன்னாசி, ஜார்ஜ், மெல்சன், ஆகிய 7 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
நெல்லிக்காயுடன் பாகற்காய் சேர்த்து ஜூஸாக்கிக் குடித்தால் இன்சுலின் சுரக்கும்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!
சர்க்கரை நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா? என்று நீதிமன்றம் கேள்வி கேட்குமளவுக்கு நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. அதெல்லாம் பணக்கார நோயாச்சே...' என்று சொன்ன காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. ஏழை-பணக்காரன், குழந்தை-பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் வருகிறது. அதேபோல,
அது ஒரு பரம்பரை வியாதி; பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளைப் பாதிக்கும்’ என்று சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் மீறி யாருக்கு வேண்டுமானாலும் அழையா விருந்தாளியைப்போல வந்து போகிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது இல்லையா? – இயக்குநர்கள் காட்டம்
‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து இயக்குநர் பிரம்மா மற்றும் லெனின் பாரதி ஆகியோர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழுக்கு ‘பாரம்’ என்ற படத்துக்கு மட்டுமே விருது கிடைத்தது. மற்ற எந்தவொரு பிரிவிலும் தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.
கேரள நிலவரம்: பாறைகளுடன் தேயிலைத் தோட்டமும் உருண்டு வந்த பயங்கரம்- நேரில் பார்த்த தேயிலைத் தோட்ட தொழிலாளி
‘நேர் கொண்ட பார்வை’
(காரை துர்க்கா)
நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள்.
மகிந்தவுடன் சந்திப்பு….
தோழர்சா.தியாகலிங்கம்எம்மைவிட்டுப்பிரிந்தார்!
ஆகஸ்ட் 8, 2019
யாழ்ப்பாணமாவட்டத்தின்சிறந்தஆசிரியர்களில்ஒருவரும், நாரந்தனைகணேசவித்தியாலயம், கொழும்புத்துறைஇந்துமகாவித்தியாலயம்என்பனவற்றின்முன்னாள்அதிபருமானதோழர்சாம்பசிவம்தியாகலிங்கம்அவர்கள்சுகவீனம்காரணமாகதமது 68ஆவதுவயதில்யாழ்ப்பாணத்தில்காலமானார்.
தோழர்தியாகலிங்கம்தாம்கற்பித்தபாடசாலைகளில்மட்டுமின்றி, பொதுவாகஅனைத்துப்பிள்ளைகளினதும்கல்வியில்எப்பொழுதும்அதிகஅக்கறைகாட்டிச்செயற்பட்டஒருவராவார்.
அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 10
– யஹியா வாஸித்.
எங்களூரில், எங்கள் அடுத்த ஊரில்,எங்கள்
அடுத்த மாவட்டத்தில் என பரவலாக,
வருடத்துக்கொருமுறை இனக்கலவரங்கள்
நடந்தன.
ஒரு தமிழன ஒரு சோனவன அடிப்பான்,ஒரு
சோனவன ஒரு தமிழன் அடிப்பான். அடிச்சிப்
போட்டு, மொத்தமாக அவனுகள இவனுகளும்,
இவனுகள அவனுகளும் அடிப்பானுகள்.ஆம்
இனக்கலவரம் ஆரம்பமாகிவிடும்.அது ஒரு
திருவிழா மாதிரி இருக்கும். ஜாலி.