தோழர் கேதீஸ் உடல் மண்ணில் வீழ்த்தப்பட்டு 13 ஆண்டுகள்!
யுத்தத்தினூடே தமிழச் சமூகம் புலமைத்துவ வறுமை கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது.
தோழர் கேதீஸ் தேசிய இனப்பிரச்சனை மற்றும் பல்லினங்களின் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கனவுகளுடன் வாழ்ந்தவர்.அவருடைய கட்டுரைகள் நூல்கள் மீள் வாசிக்கப்படவேண்டும். அறிவார்ந்த முறையில் பிரக்ஞை பூர்வமாக சமூகங்கள் மீள் இணைவதற்கான தேடலைப்பிரதிபலிப்பன.
சமகாலத்தில் அவரின் வெற்றிடம் தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒன்றாகவே எம்மால் உணரப்படுகிறது.
இந்த கட்டுரை அவர் படுகொலை செய்யப்பட ஒரு சில நாட்களில் எழுதப்பட்டது. ஒருசில மாற்றங்களுடன் மீளவும்
அந்தக்கணங்களின் உணர்வுநிலை -நினைவலைகள் சார்ந்தது.
Month: August 2019
‘ராஜபக்ஷ முகாமின் பலவீனமான வேட்பாளரே கோட்டா’
ராஜபக்ஷ முகாமின் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள, கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கமற்றவராக கடந்த காலங்களில் தம்மை நிருபித்த கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதெனத் தெரிவித்தார்.
‘தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’
குடியிருப்பின் மீது மண்மேடு சரிவு
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது, இதனையடுத்து, இன்றைய தினம் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வான்கதவுகளில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும் நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
யாழ். போதனாவுக்கு CT ஸ்கேனர்; உண்மை நிலை
இஸ்லாமிய சகோதர்களுக்கும் எமது உறவுகளுக்கும் நட்புகளுக்கும் தோழமைகளுக்கும் எமது இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்
கோட்டாதான் வேட்பாளர் – மஹிந்த அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு
விமான நிலையத்தில்
ராஜா, யெச்சூரி.
உடல்நலமற்றிருக்கும்
மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ
மொஹம்மத் யூசுஃப் தரிகமியைச்
சந்திப்பதற்காக
கஷ்மீர் சென்ற
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர்
சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட்
பொதுச்செயலாளர் D.ராஜா ஆகியோர்
ஸ்ரீநகர் விமானநிலைய வளாகத்திலேயே
தடுத்து நிறுத்தி
தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டார்கள்.
பின்னர் டெல்லிக்குத்
திருப்பியனுப்பப்பட்டார்கள்.
ஏற்கனவே ஜம்மு கஷ்மீர் ஆளுநருக்கு
தங்கள் வருகையின் நோக்கத்தை
கடிதமெழுதி அறிவித்துவிட்டுத்தான்
சென்றனர் என்பது குறிக்கத்தக்து.
‘இது சட்டவிரோதச் செயல்.
ஜனநாயகத்துக்கு எதிரானது.
எதிர்த்துப் போராடுவோம்!’ என்று
மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு.
விக்னேஸ்வரன் வாங்கிய குட்டு
(புருஜோத்தமன் தங்கமயில்)
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம், மாகாண முதலமைச்சரின் பரிந்துரைகளுக்கு அமைய, மாகாண ஆளுநர், (மாகாண) அமைச்சர்களை நியமிக்க முடியும் என்று வரையறுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கவில்லை. இதை, 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சாதாரண ஒருவர் வாசிப்பதனூடாகவே, அறிந்து கொள்ள முடியும்.