தியாகலிங்கம் மாஸ்டர்; என வட பகுதி பொது உடைமை தொழிற்சங்க இயக்க பாரம்பரியத்தில் நன்கு அறியப்பட்ட தோழர் தியாகலிங்கம் இலங்கையின் நீள அகலங்களில் ஆசிரியப்பணி ஆற்றியவர். 1970களின் நடுப்பகுதியில் இருந்து அகில இலங்கை ஆசிரியர்; சங்கம், 1980களின் பிரபல தொழிற்சங்க கூட்டுக்குழு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீண்டமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் வடபகுதி தொழிற்சங்க கூட்டுகுழு என்எல்எப்ரி பிஎல்எப்ரி என யாழ் மார்க்சிய படிப்பு வட்டம் என அவரது பொதுவாழ்வு பணி நீண்டது.
மறைந்த தோழர்கள் எச் என் பெர்னான்டோ -விசுவானந்த தேவன் வரை பலருடன் பணியாற்றயவர்; இன்று மிச்சமீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது உடைமை சமூக நீதி பிரக்ஞை கொண்ட மனிதர்களில் ஒருவராக வாழ்ந்தார்;. வர்க்கம்- சமூகநீதி- தேசிய இனங்களின் உரிமைகள் -பால் சமத்துவம் என ஒரு பொதுவுடைமைவாதியின் பிரக்ஞைகளுடன் வாழ்ந்தவர். தமிழ் சமூகத்தின் உரிமைகள் ஜனநாயக இடைவெளி என பிரக்ஞை கொண்டிருந்தார்;. மிகவும் அபாயகரமான தருணங்களில் எல்லாம் தனது தோழர்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்தவர். அவர் கொழும்புத்துறை மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2 வருடங்களாக புற்று நோயின் தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறார். அதனை காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக சமூக அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டவர். தோழர் தியாகலிங்கம் போன்ற மனிதர்கள் அருகிவிட்ட சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இடையறாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த சமூக பிரக்ஞை கொண்ட உள்ளம் ஓய்ந்து விட்டது. அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள்! அன்னாரின் மனைவியார் பிள்ளைகள் மற்றும் உறவுகள் தோழர்களுக்கு எம் ஆழ்ந்த இரங்கல்!!
ஆயிரம் நாட்களை நோக்கி போராட்டம் ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள்” வவுனியாவில் நடைபெற்றுவருகின்றது. சாத்வீகமான முறையில் நடைபெற்று வரும் இந்த நீண்ட நியாயமான போராட்டம் 2009 ம் ஆண்டு மே மாத யுத்த முடிவின் போது ஏற்பட்ட காணாமல் போனவர்களை மையப்படுத்தி நடைபெற்றுவருகின்றது. நியாயமான போராட்டம் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய இலங்கை அரசு இதுவரையில் அவ்வப் போது “சூடு தணிக்கும்” வாக்குறுதிகளை வழங்கி வந்தாலும் இதுவரை ஒரு ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை.
அதே வேளையில் தமிழ் மக்களால் பெரிய அளவில் நம்பப்பட்டு பாராளுமன்னறத்திற்கு அனுப்பப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை. கூடவே இலங்கை அரசுடன் ‘நல் உறவில்” இருக்கும் இவர்கள் அரசிற்கான அழுத்தங்களை ஏற்படுத்தி தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், இந்த கருத்து நிலைக்கு ஆதரவானவர்களும் இலங்கை அரசின் மீதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதிருத்தி மட்டுமல்லாமல் முற்று முழுதான நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கத்திற்கு அப்பால் எதிர் கட்சிகளோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் உள்ள தமிழர் தரப்பு கட்சிகளோ இதுவரை ஏற்படுத்த முடியவில்லை.
இதன் வெளிப்பாடாக சில தினங்களுக்கு முன்பு இப்போராட்டக்காரர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலம் ஒன்றில் முக்கிய கோஷமாக “அமெரிக்காவே எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்…” என்ற சரணாகதி கோஷம் எனக்கு ஈனமாகவே காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. உலகத்தில் பல்வேறு யுத்தங்களுக்கும், ஆக்கிரமிப்பு, மேலாண்மை போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவிடம் நாம் எமது மனிதாபிமான கோரிக்கையிற்கான தீர்வை எதிர்பார்த்து நிற்பது எவ்வளவு அபத்தமானது.
அது மட்டும் அல்லாது இலங்கையில் தனது கால்களை பதித்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் நடைபெறும் ‘குண்டு வெடிக்கும் கலாச்சாரச்சாரத்ததை” பயங்கரவாதத்தை அடக்குகின்றோம் என்று கால்பதித்த வரலாற்றை நாம் எமது யுத்த காலத்தில் கண்ட பின்பும் இதற்கு காரணமாக அமெரிக்காவை இரைஞ்சி அழைப்பது மக்களின் அறியாமை என்று மட்டும் என்னால் புறந்தள்ளிவிட்டுச் செல்ல முடியவில்லை.
ஒருபுறம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடக்க நாம் எமது “ஆலோசகர்”களை அனுப்புகின்றோம் என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மறுதினமே ‘தயார் நிலையில்” உள்ள படைகளை இலங்கையிற்கு அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் ‘…..நாமே பார்த்துக் கொள்கின்றோம்….” என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை நிராகரித்து சர்வதேச ஒத்துழைப்புடனேயே இதனை அணுக வேண்டும் என்ற ஆணையும், செயற்பாடும் இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னம் முனைப்புடன் செயற்பட்டு வருவதைக் காட்டுகின்றது. இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக சீனாவின் இலங்கை மீதான செற்பாடுகளுக்கு அப்பால் இன்னும் பலவும் உண்டு.
இந்நிலையில் ‘எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் அமெரிக்காவே” என்ற எம ;தரப்பு கோஷம் கொதி பானையில் இருந்து நெருப்பினுள் விழும் செயற்பாடாகவே பார்க்க முடிகின்றது. எமது மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அதுவும் 2009 மே மாதம் என்று இல்லாமல் இதற்கு முந்தைய காலங்களிலும் சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் என்று விரிவு படுத்தப்பட வேண்டும். இதே வேளை எமது மீட்போன் நிச்சயமாக அமெரிக்கா அல்ல மாறாக சர்வதேச சமூகமும், ஐ.நா. சபையும் தான். ஐ.நா.சபை இன்று அமெரிக்காவின் செல்வாக்கு வலையத்திற்குள் முழுமையாக வீழ்த்த முடியவில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஐ.நா. சபை மீதான நம்பிக்கையை தொடருவோம்.
போராடும் இந்த மக்களிடம் இருக்கும் தெளிவற்ற ‘இரஞ்சலை” தெளிவுபடுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை சிறப்பாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்களின் கடமை. இதில் முன்னாள் விடுதலை அமைப்பு ஜனநாயக, இடதுசாரிப் போராளிகள் கணிசமான செயற்பாடுகளை செய்தே ஆகவேண்டும். அன்றேல் ட்றம் என்பவரே எமது மீட்போன் என்ற மோசமான கருத்தியலை எமது மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது.
ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகும் போது ஆனையிறவு உப்பளத்தை தாண்டும் நேரமெல்லாம், விஷாலியையும் அஜனையும் ஒரு தடவை உப்பளத்துக்கு உள்ளே கூட்டிச்சென்று காட்ட வேண்டும் என்று நினைப்பேன். அப்பொழுது தானே உப்பு எப்படி விளைகின்றது? எப்படி அறுவடை செய்வார்கள்? என்று நானும் பார்க்கலாம் 😉
இந்தியாவில் இருந்து துண்டாடப்பட வேண்டும் என்று பல தசாப்பங்களாக போராடி வரும் காஷ்மீர் என்று பலராலும் அழைக்கப்படும் ஜம்மு – காஷ்மீர் இன்று தனக்குள் இரண்டாக துண்டாடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் ஈழம் என்று பலராலும் அறியப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர் பிரதேசம் எவ்வாறு இலங்கையில் இருந்து துண்டாடி வெளியேற முற்பட்டு இன்று வடக்கு, கிழக்கு என்று தனக்குள் துண்டாடப்பட்டிருக்கின்றதோ என்பதை தற்போதைய காஷ்மீர் நிலமை எனக்குள் ஞாபகப்படுத்தி நிற்கின்றது.
(முகம்மது தம்பி மரைக்கார்) விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
(காரை துர்க்கா) பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், ஏனைய இழப்புகள் தொடர்பான விவரங்களைத் திரட்டவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 370 சட்டப்பிரிவு ரத்தை ஆதரிப்பதால் அதிமுக என்ற பெயரை அகில இந்திய பாஜக என்று இனி மாற்றிக்கொள்ளலாம் என்ற ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் அமெரிக்கா தொடங்கி ஐ.நா.வரை சென்று குரல் எழுப்பிய வரலாறும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக் கொண்டுவிடும். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். இதனால் முடி பிரச்சினைகள் நீங்கும்.
மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.