சமீப நாட்களாக நிலவுக்கான தரையிறங்கு கலம் ‘விக்ரம்’ பற்றிய கவலை இந்தியர்களை ஆக்கிரமித்திருக்கிறது. நிலவை ஆராயும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முயற்சியில், இந்தக் கலம் சற்று வேகமாக விடுபட்டு, நிலவின் தரையில் சாய்ந்ததுடன் தகவல் தொடர்பையும் இழந்துள்ளது. மற்றபடி, நிலவை ஆராயும் முயற்சி வெற்றிகரமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. விக்ரமிடமிருந்து சமிக்ஞைகள் பெறுவதுகூடச் சாத்தியம்தான் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளில் ஒருசிலருக்கு இருக்கிறது.
Month: September 2019
புதின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதா?
‘தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்’
“மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே தற்போது பெற்றுக்கொடுத்துவருகின்றது. எனவே, மலையக அரசியல் தலைமைகள் அன்று தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் இந்நேரம் முழுமையானதொரு சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்.’’ என, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
சில தவறான, நேர்மையற்ற ஏதிர்வினைகள்
எமது கட்டுரைகளுக்கு வரும் சில ஏதிர்வினைகள் எம்மைப் பற்றி சில தவறான, நேர்மையற்ற கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கின்றன. நாம் மக்கள் விடுதலை முன்னணியின் (J V P) ஆதரவாளர்கள் அல்லது முன்னைய அங்கத்தவர்கள் என்னும் பொருள்பட சிலர் எழுதுகிறார்கள். நாம் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள், இந்நாள் ஆதரவாளர்கள் அல்ல. நாம் மக்கள் விடுதலை முன்னணியின் தவறுகளை விமர்சனமும் , அதில் தமது பாத்திரங்களை சுயவிமர்சனமும் செய்து கொண்டு வெளியேறிய முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்புக்களின் ஆதரவாளர்களாகவே இருக்கிறோம்.
முத்தையா முரளிதரன்
(Subamangala Saththiyamoorthy)
இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரன் விடுதலைப் புலிகள் பற்றிக் கூறிய கருத்து அந்த இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இயல்பானதுதான்.
முரளிதரன் இத்தகைய ஒரு கருத்தை விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில், அதுவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச பங்குபற்றிய ஒரு நிகழ்ச்சியில் வைத்து ஏன் கூறினார் என்பது சிந்தனைக்குரியதுதான்.
இலக்கிய சந்திப்பு
விமான நிலையத்தில் அதிக நெரிசல்
வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன நரா லோகேஷ் மற்றும் அவரது தெலுங்கு தேசக் கட்சியின் சில தலைவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் வைஸ்.எஸ் ஜகன் மோகன் ரெட்டியின் அரசாங்கத்துக்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் பங்குபற்றுவதலிருந்து தடுக்கப்படுவதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர்…..
(Sugan Paris)
காணாமல் ஆக்கப்பட்டோர் நிலையும் அவர்கள் கோரிக்கையும் மிகவும் சிக்கலான ஒன்று. திடீரென ஓர் நாளில் எல்லோரும் காணாமற்போனவர்களில்லை. இறுதி யுத்தம் வரை இருந்தவர்கள் பின்னர் காணாமற் போன நிலையில் அவர்கள் பற்றிய பெயர் விபரங்கள் அடங்கிய தொகுப்பு எவரிடமும் இல்லை. உண்மையில் தமிழ் அரசியற் தலைமை( கூட்டமைப்பு )தான் இதில் முழுமையாக ஈடுபட்டிருக்க வேண்டும். காணாமல் போனோர்களுக்கான நிறுவனம் ஒன்றை திறந்து இந்த பத்தாண்டு காலத்தில் அதன் இலக்கை அடைந்திருக்கலாம்.
தாயகத்தை விட்டு துரத்துவோம்…..
(Sritharan Thirunavukarsu)
காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரில் போராடுபவர்கள் மானிட அடையாளத்தை முன்நிறுத்த வேண்டும். தமிழ்பாசிச அடையாளத்தை அல்ல. காணமல் ஆக்கப்பட்டு இதுவரை வீடு திரும்பாதோர் 2009 வரையிலான 30 வருடங்களில் பல்லாயிரம். ஒருசிலர் அல்ல. தாயகத்தை விட்டு துரத்துவோம் ஒரிசாவிற்கு ஓட்டுவோம் என்ற உருட்டல் மிரட்டல் காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டது .