(Rathan Chandrasekar)
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் (ISCUF) சார்பில் ரெண்டுமாசம் முன்பு –
‘பாம்பியாவே திரும்பிப் போ!’ என்று சென்னையில் போஸ்டர் ஒட்டப்பட்டபோது, வழக்கம்போல இந்த முறையும் சடங்குக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு
‘GO BACK’ சொல்கிறார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் – இந்த பாம்பியோ லேசுப்பட்ட ஆசாமியல்ல என்கிறார்
டாக்டர் த. அறம். அவர் சொன்னதிலிருந்து கொஞ்சம் எடுத்து விடுகிறேன் பாருங்கள்.
Month: September 2019
சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்
(எம். காசிநாதன்)
இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?
(காரை துர்க்கா)
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் எனப் பலரும், அகத்திலும் புறத்திலும் விமர்சித்து வருகின்றனர். இந்த விடயம், தமிழர்களைப் பொறுத்த வரையில், உண்மையாக, வேதனையாகவே பகிரப்பட்டு வருகின்றது.
நிலவுக்கு அருகே செல்லும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்?
முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் தனது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அந்தக் கட்சி இன்று (09) அறிவித்துள்ளது.
முன்னாள் போராளியான எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது-போராளிகளின் ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர பொலீஸ் சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்டம் முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார். புதன்கிழமை (21) மாலை காரைதீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்.
மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்-கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி
மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீ.நிகால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (6) காலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினர்
(ஜனகன் முத்துக்குமார்)
அஸாம் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இது கிழக்கு இமயமலைக்கு தெற்கே பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதி பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளது. 78,438 கிலோ மீற்றர் பரப்பளவு மற்றும் சுமார் 32 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இம்மாநிலத்தின் வடக்கே பூட்டான் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லையாக உள்ளன. கிழக்கில் நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோரமும், தெற்கே பங்களாதேஷ், மேற்கு வங்கமும், மேற்கில் சிலிகுரியும் காணப்படுகின்றன.
இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கப்போகும் விவசாயம்
(அனுதினன் சுதந்திரநாதன்)
இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் சகலவிதமான தொழில்முறையும் வணிகமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, பாரம்பரியமான விவசாயமுறையும் விதிவிலக்கல்ல. விவசாய செயற்பாடுகள் காலகாலமாக பல்வேறு தொழில்நுட்பங்களின் அறிமுகத்தினால், வேறுபட்டவகையில் விருத்தியடைந்து வந்திருந்தாலும், அதன் வர்த்தக முறையில் தற்காலத்தில்தான் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவிருந்தாலும், விவசாயத்துறையும் ஏனைய துறைகளைப்போல இடைத்தரகர்களிடம் சிக்கித்தவிக்கும் துறையாக மாறிவருகின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இரத்தினபுரி மாவட்ட சிங்கள பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் அதிகம்’
இரத்தினபுரி மாவட்டத்தில், பெரும்பாலான தோட்ட மாணவர்கள், சிங்கள மொழி மூல பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு கல்வி கற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பெல்மதுளை, இரத்தினபுரி, கலவான பகுதியிலுள்ள தோட்டத்துக்கு அணமையிலுள்ள பாடசாலைகளிலேயே, தமிழ் மாணவர்கள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.