நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்…
4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட,
கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
The Formula
(Subamangala Saththiyamoorthy)
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தவறானதும், பயனற்றதும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவறானது என்று சொல்வதற்குக் காரணம், அந்த இயக்கம் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் ஜனநாயக அரசியல் அமைப்புமுறையை (முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் கூட) அழித்தொழிப்பதற்கு இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்த பயங்கரவாத இயக்கமாகும்.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று (24) கொழும்பில் கூடவிருந்த நிலையில், வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார்.