ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்னால், இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Month: October 2019
சிந்திக்கணும் சீமான்
(த.ராஜன்)
சீமானிடம் வழக்கமாக வெளிப்படும் தெனாவட்டான பேச்சின் அடுத்தகட்ட நீட்சியாகியிருக்கிறது ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் அவர் பேசியது. ராஜீவ் காந்தி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது இன்னும் ஆறாத காயமாகவும், நம் தமிழக அரசியல் வரலாற்றில் நீங்காத கறையாகவும் தொடர்கிறது.
கனடா தேர்தல் முடிவு
வலதுசாரி பழமைவாத கட்சியின் தோல்வியும் லிபரலுக்கு மூக்கணாங் கயிறு போட்ட அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வெற்றியும் கனடாவின் ஜனநாயகத்திற்கு நல்லது. இதுவே தேர்தல் முடிவாக வந்திருக்கின்றது
விடிந்தால் கனடியத் தேர்தல்
(சாகரன்)
ஒரு கண்டம் அளவிற்கு விரிந்திருக்கும் வட அமெரிக்க நாடு கனடாவின் பொதுத் தேர்தல் விடிந்தால். பல இலட்சம் உழைக்கும் மக்களின் விடியலைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் உலகளாவிய காலநிலை மாற்றம் பற்றிய சுற்றுச் சூழல் போன்ற விடங்களின் போக்கை தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது முன்னிலை பெறுகின்றது. அமெரிக்கா, இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அதி தீவிர வலதுசாரிக் கொள்கையாளர்களை நாட்டின் தலைவராக மாற்றி தேர்தலைப் போன்று கனடாவையும் மாற்றியமைக்கும் பொது செயற்பாட்டிற்குள் கனடாவையும் வீழ்த்தும் பிரச்சாரங்களே உள்ள நாட்டிலும் வெளி நாட்டிலும் ஊடகச் செல்வாக்குள் செயற்பட்டு வரும் நிலையில் தேர்தலை கனடா சந்திக்கின்றது.
குர்திஷ் மீதான துருக்கிய முற்றுகை: வரலாறு கற்றுக்கொடுக்கும் போது…
கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?
அந்தத் தேசப்பற்றாளர்கள் எங்கே?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு
யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இதனை திறந்துவைத்தனர். இதனையடுத்து, இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வருகைத் தந்த முதலாவது விமானமான எயார் இந்தியன் அல்லையன்ஸ் தரையிறங்கியுள்ளது.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை பகிஸ்கரிக்காது’
தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோருவது ஒரு பிழையான செயற்பாடு எனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், “தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வராது” என்றார். ஊடகங்களுக்கு நேற்று (16) கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.